துணை மருத்துவப் பட்டப்படிப்புகள்!

8/21/2017 3:00:51 PM

துணை மருத்துவப் பட்டப்படிப்புகள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

+2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி துணை மருத்துவக் கல்வி நிறுவனங்கள் இவற்றில் பல்வேறு துணை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண் தகுதியின் அடிப்படையில், ஒற்றைச் சாளர முறையில் மாணவர்களைத் தேர்வு செய்ய தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிப்பதற்கான நேரமிது.

என்னென்ன துணை மருத்துவப் படிப்புகள்?
1) B.Pharm - 4 ஆண்டுகள்
2) B.Sc., (Nursing) - 4 ஆண்டுகள் (8 செமஸ்டர்கள்)
3) B.P.T. (Bachelor of Phsiotheropy) - 4 ஆண்டுகள் (8 செமஸ்டர்கள்) மற்றும் 6 மாத உறைவிட இன்டர்ன்ஷிப்
4) B.A.S.L.P. (Bachelor of Audiology and Speach Language Pathology)- 4 ஆண்டுகள் மற்றும் 1 ஆண்டு இன்டர்னிஷிப்
5) B.Sc. (Radiology & Imaging Technology) - 3 ஆண்டுகள் மற்றும் 6 மாதம் உறைவிட இன்டர்ன்ஷிப்
6) B.Sc., (Radio Theropy Technology) - 3 ஆண்டுகள் மற்றும் 6 மாதம் உறைவிட இன்டர்ன்ஷிப்
7) B.Sc., (Cardio Pulmonary Perfusion Technology) - 3 ஆண்டுகள் மற்றும் 1 ஆண்டு  இன்டர்ன்ஷிப்
8) B.O.T. (Bachelor of Occupation Theraphy) - 4 ஆண்டுகள் (8 செமஸ்டர்கள்) மற்றும் 6 மாத உறைவிட இன்டர்ன்ஷிப்
9) B.optom (Bachelor of Opthomology) - 3 ஆண்டுகள் மற்றும் 1 ஆண்டு இன்டர்ன்ஷிப்.

விண்ணப்பிக்க அடிப்படைத் தகுதி: இப்படிப்புகளுக்கு இந்தியக் குடியுரிமையுள்ள தமிழ்நாட்டைச் சொந்த மாநிலமாகக் கொண்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். வயது வரம்பு: பி.எஸ்சி. நர்சிங் படிப்பிற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு, 31.12.2017 நிலவரப்படி குறைந்தது 17 ஆண்டுகளும் உச்ச வயது வரம்பு 30 ஆண்டுகளும் இருக்க வேண்டும்.எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி(அ), ஆகிய பிரிவினருக்கு உச்ச வயது 35 ஆண்டுகள் இருக்கலாம். மற்ற படிப்புகளுக்கு 31.12.2017 நிலவரப்படி விண்ணப்பிக்க 17 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் (அல்லது) இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது) ஏதேனும் ஒரு பாடத்துடன் கணிதம் உள்ள குழுவை எடுத்து ஒரேமுறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பி.பார்ம் / பி.ஏ. எஸ்.எல்.பி. ஆகிய படிப்புகளுக்கு ஓ.சி., பி.சி., பி.சி.(எம்), எம்.பி.சி., டி.என்.சி. பிரிவு  மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் குறிப்பிட்ட பாடங்களின் கூட்டு சராசரியாக குறைந்தது 40% மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.சி(ஏ)., எஸ்.டி., பிரிவு மாணவர்கள் குறைந்தபட்ச தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு விண்ணப்பிக்க: ஓ.சி., பி.சி., பி.சி(எம்)., எம்.பி.சி., டி.என்.சி. பிரிவு மாணவர்கள் குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களும், எஸ்.சி. எஸ்.சி(ஏ)., எஸ்.டி., பிரிவு மாணவர்கள் குறைந்தபட்சம் குறிப்பிட்ட பாடங்களில் 40% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். பி. ஆப்தோமாலஜி படிப்பிற்கு விண்ணப்பிக்க அனைத்துத் தரப்பு மாணவர்களும் குறிப்பிட்ட பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

பி.பி.டி., பி.எஸ்சி., ( ரேடியோலஜி & இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்சி., ரேடியோ தெரபி, பி.எஸ்சி, கார்டியோ பல்மனரி பர்ஃபியூசன் டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அனைத்துத் தரப்பு மாணவர்களும் குறிப்பிட்ட பாடங்களில் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எவ்வாறு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்?

விண்ணப்பித்த மாணவர்கள் ஒற்றைச் சாளர முறையில் +2வில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மாநிலப் பாடத்திட்டமெனில், மதிப்பெண்கள் நார்மலிசேஷன் செய்யப்படும்.

மொத்த மதிப்பெண்கள் =200
உயிரியல் விழுக்காடு : x
இயற்பியல், வேதியியல் விழுக்காடு: y  
தாவரவியல், விலங்கியல் விழுக்காடு: z
கணிதம் விழுக்காடு: w

கணக்கீடு (கட் ஆஃப்):  (x +y) அல்லது (Z+Y) அல்லது (w+y) இரண்டு தசம் சுத்தமாக இந்த மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட் ஆஃப் பெற்றிருப்பின், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல், வேதியியல், நான்காவது பாடத்தின் விழுக்காடு மற்றும் வயதில் மூத்தவர், ரேண்டம் எண் என்ற வரிசையில் முன்னுரிமை தரப்படும்.

இடஒதுக்கீடு: ஒற்றைச் சாளர முறை கவுன்சிலிங்படி, பொதுப்பிரிவினருக்கு 31 விழுக்காடும், பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 30 விழுக்காடும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 விழுக்காடும், ஆதிதிராவிடர்களுக்கு 18 விழுக்காடும், பழங்குடியினருக்கு 1 விழுக்காடும் இட ஒதுக்கீடு தரப்படும்.

பிற்படுத்தப்பட்டவருக்கான 30 விழுக்காடு, முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட வருக்கும், ஆதிதிராவிடர்களுக்கான 18 விழுக்காட்டில் 16 விழுக்காடு அருந்ததி யருக்கும் ஒதுக்கப்படும்.

பாடத்திட்டங்களுக்கான இடங்கள்: எந்தெந்த அரசுக் கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் உள்ளன என்பதைப் பற்றிப் பார்ப்போம். B.Sc. (Nursing), சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி. B.Pharm, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும், BPT கே.கே.நகர் காலேஜ் ஆஃப் பிசியோதெரபி, திருச்சி பிசியோதெரபி அரசு கல்லூரியிலும், B.A.S.L.P சென்னை அரசு மருத்துவக் கல்லூரியிலும், B.Sc. (Radiology & Imaging Technology சென்னை ஸ்டான்லி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், B.Sc., (Radio Theropy Technology) சென்னை அரசு மருத்துவக் கல்லூரியிலும் உள்ளன.

B.Sc., (Cardio Pulmonary Perfusion Technology) சென்னை மருத்துவக் கல்லூரியிலும், B.Sc., Opthomatry சென்னை மருத்துவக் கல்லூரியில் உள்ள ரீஜினல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆப்தோமாலஜி அண்ட் ஹாஸ்பிட்டலிலும் உள்ளன. இவை தவிர, தனியார் சுயநிதி சிறுபான்மையினரல்லாத நிறுவனங்களின் 65 விழுக்காடு இடங்களும், சிறுபான்மை யினர் நிறுவனங்களின் 50 விழுக்காடு இடங்களும் ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படும். முன்னாள் ராணுவத்தினர் பிள்ளை களுக்கு B.Sc., (நர்சிங்) 1 இடமும், B. Pharm-1, B.P.T. 1 இடம் உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 3 விழுக்காடு இடம் உண்டு.

விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பம், மற்றும் விவரங்களை 7.8.2017 முதல் 23.8.2017 வரை ஞாயிறு தவிர்த்து மற்ற நாட்களில் அனைத்து (22) அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.400ஐ ‘The Secretary, Selection Committee, Kilpauk, Chennai - 10’ என்ற பெயரில் வங்கி வரைவோலை கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். கீழ்ப்பாக்கம் செலக்சன் கமிட்டியில் விண்ணப்பம் வழங்கப்படமாட்டாது. ஒரே ஒரு விண்ணப்பம்தான் அனைத்துப் பிரிவுகளுக்கும் அனுப்பவேண்டும்.

விண்ணப்பத்தை www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பக் கட்டணத்தை வங்கி வரைவோலை எடுத்து இணைத்து சமர்ப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.சி(ஏ), எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் விலக்களிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள், மாற்றுத்திறனாளிகள் ரூ.100 க்கான வரைவோலை இணைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரிலோ அல்லது அஞ்சலிலோ ‘The Secretary, Selection Committee, 162, EVR Periyar High Road, Kilpauk, Chennai - 10’ என்ற முகவரிக்கு 24.8.2017க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்காணும் துணை மருத்துவப் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மற்றும் கூடுதல் தகவல்களை அறிய மேற்காணும் இணையதளத்திலிருந்து தகவல் குறிப்பேட்டினைத் தரவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது இப்படிப்புகளுக்கான தேர்வுக்குழு அலுவலகத்தின் 044-28361674 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ தெரிந்துகொள்ளலாம்.  

- ஆர்.ராஜராஜன் 

மேலும்