ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை!

9/25/2017 2:18:06 PM

ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய தேசிய ராணுவக் கல்லூரியில் ஜூலை 2018 பருவத்தில் கல்வி பயில்வதற்கான மாணவர் சேர்க்கைக்கு நாட்டில் சில குறிப்பிட்ட இடங்களில் 1.12.2017 மற்றும் 2.12.2017 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. சென்னை நகரிலும் இத்தேர்வு நடைபெற உள்ளது.

கல்வித்தகுதி:

1.7.2018-ல் அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர் 1.7.2018 அன்று 11  வயது நிரம்பிய வராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது, அவர்கள் 2.7.2005-க்கு முன்னதாகவும் 1.1.2007-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக்கூடாது. இந்த வயது வரம்பில் எந்த தளர்த்தலும் கிடையாது.

தேர்வு முறை:

மாணவர் சேர்க்கைக்கான தேர்வு முறை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு, ஆங்கிலம், கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்கள் கொண்டது. கணக்குத்தாள் மற்றும் பொது அறிவுத்தாள் ஆகியன ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும்.

நேர்முகத் தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக்கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் 5.04.2018 அன்று நடைபெற உள்ள நேர்முகத்தேர்வு விவரம் பின்னர் அறிவிக்கப்படும். ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப்படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை ‘கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன், உத்தர் காண்ட், அஞ்சல் குறியீட்டு எண் 248003’ என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பித்து, ‘கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூனுக்கு ‘உத்தர்காண்ட், டேராடூன், டெல் பவன், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’வங்கி கிளையில் (வங்கி குறியீடு 01576) செலுத்தத்தக்க பொதுப்பிரிவினர் ரூ.600க்கான மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூ.555க்கான கேட்புக் காசோலையை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் அச்சிடப்பட்ட மற்றும் ஒளிநகல் எடுக்கப்பட்ட ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி ஹாலோகிராம் முத்திரையிடப்
படாத விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) ‘தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பிரேசர் பாலச்சாலை, வி.ஓ.சி. நகர், சென்னை - 600 003 என்ற முகவரிக்கு 30.9.2017 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு ராஷ்ட்ரிய இந்திய ராணுவக்கல்லூரியின் www.rimc.gov.in இணையதளத்தை பார்க்கலாம்.

மேலும்

X