IIT -களில் M.Sc. & Ph.D படிக்க JAM 2018 தேர்வு!

10/9/2017 12:11:06 PM

IIT -களில் M.Sc. & Ph.D படிக்க JAM 2018 தேர்வு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (Indian Institute of Technology) இந்தியா முழுவதும் உள்ளன. இவற்றில் இடம் பெற்றிருக்கும் முதுநிலை அறிவியல் (M.Sc.), ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டப்படிப்பு (M.Sc., Ph.D), முதுநிலை அறிவியல் மற்றும் முதுநிலை தொழில்நுட்பம் கொண்ட இரட்டை பட்டப்படிப்புகள் (M.Sc., M.Tech) மற்றும் மேல் இளம்நிலை பட்டப்படிப்புகளில் (Post Bachelor degrees) சேர்க்கை பெறுவதற்கான முதுநிலை அறிவியல் இணைச் சேர்க்கைத் தேர்வு  2018க்கு (Joint Admission Test for M.Sc. (JAM-2018) விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.படிப்புகள்: இந்திய அறிவியல் கழகம் மற்றும் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் கீழ்க்காணும் படிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

Indian Institute of Science, Bangalore-ல்  Biological Science, Chemical Science, Mathematical Science, Physical Science ஆகிய பாடங்களில் ஒருங்கிணைந்த முனைவர் பட்டப்படிப்பு Indian Institute of Technology, Bombay-ல் Energy பாடத்தில் முதுநிலை மற்றும் முனைவர் இரட்டை பட்டப்படிப்பு Indian Institute of Technology, Bhuvaneshwar-ல் Chemistry, Geology, Mathematics, Physics,  Atmosphere and Ocean Sciences ஆகிய பாடப் பிரிவுகளிலான இணை முதுநிலை அறிவியல் ஆய்வுப் படிப்புகள்Indian Institute of Technology,

Bombay- இரண்டு ஆண்டு கால அளவிலான Applied Geology, Applied Geophysics, Applied Statistics and Informatics, Biotechnology, Chemistry, Mathematics, Physics ஆகிய பாடப் பிரிவுகளிலான முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புகள், Environmental Science and Engineering மற்றும் Operations Research பிரிவுகளிலான முதுநிலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டப்படிப்பு  கொண்ட இரட்டை பட்டப்படிப்புகள். டெல்லி, காந்தி நகர், ஜோத்பூர், சென்னை, பாட்னா மற்றும் ரோபாரிலுள்ள IITகளில் இரண்டு ஆண்டு கால அளவிலான Chemistry,

Mathematics மற்றும் Physics பிரிவுகளிலான முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புகள், கவுகாத்தி மற்றும் ஐதராபாத்திலுள்ள IITகளில் இரண்டு ஆண்டு கால அளவிலான Chemistry, Mathematics and Computing மற்றும் Physics பிரிவுகளிலான முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் Indian Institute of Technology, Indore-ல் இரண்டு ஆண்டு கால அளவிலான Chemistry, Mathematics மற்றும் Physics, Astronomy மற்றும் Biotechnology பிரிவுகளிலான முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் சில விதிமுறைகளுக்குட்பட்டு முனைவர் பட்டப்படிப்புக்கு மாற்றிக்கொள்ளக் கூடியதான இரட்டை பட்டப்படிப்பு. Indian Institute of Technology, Kanpur-ல் இரண்டு ஆண்டு கால அளவிலான Chemistry, Mathematics,

Physics மற்றும் Statistics பிரிவுகளிலான முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புகள், இயற்பியல் பிரிவிலான முதுநிலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டப்படிப்பு கொண்ட இரட்டை பட்டப்படிப்பு.Indian Institute of Technology, Karagpur-ல் Chemistry, Geology, Geophysics, Mathematics மற்றும் Physics பிரிவுகளிலான இணை முதுநிலை அறிவியல் ஆய்வுப் படிப்புகள், Indian Institute of Technology, Roorkee-ல் இரண்டு வருட கால அளவிலான Applied Geology, Biotechnology, Chemistry, Economics, Mathematics மற்றும் Physics பிரிவுகளிலான முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புகள்   

கல்வித்தகுதி: மேற்காணும் ஒவ்வொரு பட்டப்படிப்புக்குமான குறைந்தபட்ச கல்வித்தகுதி குறித்த விவரங்கள் தகவல் குறிப்பேட்டில் தனித்தனியாக இடம் பெற்றிருக்கின்றன. இருப்பினும், இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் நிலையில் இளநிலைப் பட்டப்படிப்பில் மொழியியல் மற்றும் துணைப்பாடங்கள் உட்பட அனைத்துப் பாடங்களிலும் பொது மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினர் 55% மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50% மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மதிப்பெண்கள் புள்ளிகளி லான தரக்குறியீட்டில் (Grade) இருப்பின் மேற்காணும் மதிப்பெண்களுக்கு இணையான புள்ளிகளுடனான தரத்தில் இருக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்குப் பின்பு 30.9.2018 அன்று உரிய தகுதிச் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

இணைச் சேர்க்கைத் தேர்வு: மேற்காணும் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு நடத்தப்படும் JAM 2018  தேர்வு இரு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவில் 1.உயிர்த் தொழில்நுட்பம், 2.வேதியியல், 3.நிலவியல், 4.கணிதப் புள்ளியியல் பாடங்களும், இரண்டாம் பிரிவில் 5. உயிரியல் அறிவியல், 6. கணிதம், 7. இயற்பியல் எனும் ஏழு பாடப்பிரிவுகளில் (தாள்களில்) நடத்தப்படுகிறது. இதில் எழுதவிருக்கும் பாடப்பிரிவு (தாள்) குறித்து விண்ணப்பத்தில் குறிப்பிடவேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய கல்வித் தகுதிக்கேற்ப இரு பாடப்பிரிவுகளில்  தேர்வு எழுத முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://jam.iitb.ac.in/ என்ற இணையதளத்தில் கிடைக்கும் தகவல் குறிப்பேட்டைத் தரவிறக்கம் செய்து, அதனை முழுமையாகப் படித்துத் தெளிவாகத் தெரிந்துகொண்டு, இணையதளம் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு பாடப்பிரிவுக்கு (தாளுக்கு) பொது மற்றும் இதர பிற்பட்ட வகுப்புப் பிரிவினர் ரூ.1500, எஸ்.சி.. எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் ரூ.750 எனவும், இரு பாடப்பிரிவுகளுக்கு (தாள்களுக்கு) பொது மற்றும் இதர பிற்பட்ட வகுப்புப் பிரிவினர் ரூ.2100, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் ரூ.1050 எனவும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 10.10.2017.

அனுமதிச் சீட்டு: இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் மேற்காணும் இணையதளத்திலிருந்து 9.1.2018 முதல் தேர்வு நாள் வரை தேர்வுக்கான அனுமதி அட்டையினை (Admit Card) தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த அனுமதி அட்டை தபால் வழியாகவோ, வேறு வழிகளிலோ அனுப்பி வைக்கப்படாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேர்வு நாள்: இணைய வழியிலான கணினித் தேர்வு முறையில் நடத்தப்படும் இத்தேர்வுக்கு பெங்களூர், மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், கரக்பூர், சென்னை, ரூர்க்கி ஆகிய எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 65 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சென்னை மண்டலத்தில் இடம் பெற்றிருக்கும் 10 தேர்வு மையங்களில் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி என்று 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்துத் தேர்வு மையங்களிலும் 11.2.2018 அன்று காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரையில் உயிர்த் தொழில்நுட்பம், வேதியியல், நிலவியல் மற்றும் கணிதப் புள்ளியியல் பாடப்பிரிவுகளுக்கும், மதியம் 2.00 மணி முதல் 5.00 மணி வரை உயிரியல் அறிவியல், கணிதம் மற்றும் இயற்பியல் பாடப்பிரிவுகளுக்கும் தேர்வுகள் நடைபெறும்.

தேர்வு முடிவுகள்: மேற்காணும் ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்குமான தேர்வு முடிவுகள் மேற்காணும் இணையதளத்தில் 20.3.2018 அன்று வெளியிடப்படும். தகுதியுடைய மாணவர்கள், தங்களுக்கான அகில இந்திய அளவிலான தரம், மதிப்பெண்கள் கொண்ட மதிப்பெண் அட்டையினை (Score Card) மேற்காணும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்..

மாணவர் சேர்க்கை: இந்திய அறிவியல் கழகம் மற்றும் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் இடம் பெற்றிருக்கும் மேற்படி படிப்புகளில் சேர்க்கைக்கு மேற்காணும் இணையதளம் வழியாக 3.4.2018 முதல் 17.4.2018 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான பரிசீலனைக் கட்டணமாக ரூ.600ஐ 19.4.2018 ஆம் தேதிக்குள் இணையப் பரிமாற்ற முறையில் செலுத்த வேண்டும்.

இந்தியத் தொழில்நுட்பக் கழகம் வாரியாக, மாணவர் சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் மாணவர்கள் பட்டியல் இணையதளத்தில் 22.5.2018 அன்று வெளியிடப்படும். இப்பட்டியலில் இடம் பெற்றவர்கள் தொடர்புடைய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ.10000, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.5000 முன்பணமாகச் செலுத்தி சேர்க்கையை உறுதிப்படுத்திட வேண்டும்.

இதில் சேர்க்கை பெறாமல் காலியாகும் இடங்களுக்கு இரண்டாவது மாணவர்கள் பட்டியல் இணையதளத்தில் 12.6.2018 அன்று வெளியிடப்படும். இப்பட்டியலில் இடம் பெற்ற மாணவர்கள் தங்கள் சேர்க்கையை உறுதிப்படுத்த மேற்காணும் முன்பணத்தைச் செலுத்திட வேண்டும். இதிலும் காலியிடங்கள் ஏற்படும் நிலையில், அதற்கான மூன்றாவது மாணவர்கள் பட்டியல் இணையதளத்தில் 29.6.2018 அன்று வெளியிடப்படும். மூன்றாவது பட்டியலே இறுதிப்பட்டியலாகும்.

இத்தேர்வுக்கான பாடத்திட்டம் (Syllabus), தேர்வு தொடர்பான தகவல் (Examination Related Information) போன்ற கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர் மேற்காணும் இணையதளத்தினைப் பார்க்கலாம்.

- உ.தாமரைச்செல்வி

X