சென்னைப்பல்கலையில் மாணவர் சேர்க்கை!

10/24/2017 12:54:06 PM

சென்னைப்பல்கலையில் மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

சென்னைப் பல்கலையில், சுயநிதிக் கல்வி முறையில் 2 ஆண்டுகள் கொண்ட எம்.எல். படிப்புகளில், மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: சர்வதேச சட்டம் மற்றும் அரசியலமைப்பு சட்டம், குற்றவியல் சட்டம், அறிவுசார் சொத்து சட்டம், மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் சட்டம் மற்றும் நிர்வாகச் சட்டம் ஆகிய துறை பிரிவின் கீழ் வழங்கப்படும் எம்.எல்., படிப்புக்கு, மூன்றாண்டுகள் கொண்ட பி.எல்.,- எல்.எல்.பி. அல்லது ஐந்து ஆண்டுகள் கொண்ட பி.எல்.- எல்.எல்.பி., பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவர்களாகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2017

மேலும் விவரங்களுக்கு: www.unom.ac.in

X