பழங்குடியினர் கல்வி மேம்பாட்டிற்கு தனிப் பல்கலைக்கழகம்!

4/9/2018 12:34:05 PM

பழங்குடியினர் கல்வி மேம்பாட்டிற்கு தனிப் பல்கலைக்கழகம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பழங்குடியினர்களிடம் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் நாட்டில் முதன்முறையாக ஒரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அதுதான் இந்திராகாந்தி நேஷனல் டிரைபல் யுனிவர்சிட்டி. ஒட்டுமொத்தமாக உயர்கல்வி சேர்க்கை விகிதம் 11.6 சதவீதமாக உள்ள நிலையில், பழங்குடியின மக்கள் வெறும் 6.6 சதவீதம் மட்டுமே உயர்கல்வி பெறுகின்றனர்.

இதனால், மத்தியப்பிரதேசம், ஒடிசா, சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பழங்குயினரது கல்வி மேம்பாட்டை மையமாகக் கொண்டு மத்தியப்பிரதேச மாநிலம் அமர்கன்தாக் பகுதியில் இப்பல்கலைக்கழகம் யல்பட்டுவருகிறது.

சுற்றுலா, அரசியல் அறிவியல், புவியியல், வரலாறு, வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலைப் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. பழங்குயிடினரின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் மையமாக வைத்து இந்தப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்திராகாந்தி தேசிய பழங்குடி பல்கலைக்கழகச் சட்டம், 2007-ன் படி அமைக்கபட்ட இந்திராகாந்தி டிரைபல் யுனிவர்சிட்டி யானது மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இப்பல்கலைக்கழகம் 2018-19 கல்வியாண்டின் பல்வேறு பட்டப்படிப்புகளுக்கான மாணவ சேர்க்கைக்கான அறிவிப்பை 2018 ஜனவரி 22ம் தேதியே தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது இந்திராகாந்தி டிரைபல் யுனிவர்சிட்டி.
வழங்கப்படும் படிப்புகள்

இளநிலைப் பட்டப்படிப்புகள்

BA (Hons): Ancient Indian History, English, Hindi, Political Science & Human Rights, Sociology, Psycology(BA, Bsc).
B.sc., (Hons): Environmental Sciences, Botany, Bio-technology, Chemistry, Zoology, Yoga.
B.Com (Hons) மற்றும் B.C.A, B.B.A, B.pharm, D.pharm, B.Ed.

முதுநிலைப் பட்டப்படிப்புகள்

M.A: English, Hindi, Linguistics, Applied Psycology, Economics, Ancient Indian History, History, Culture and Archaeology, Geography, Political Sciences and Human Rights, Tribal Studies.M.sc.: Botony, Zoology, Geology, Chemistry, Bio-technology, Environmental Sciences, Physics, Mathematics, Statistics.
M.Com, MCA, M.B.A (Bussiness Management), M.B.A. (Tourism Management)

கல்வித் தகுதி

மத்திய அரசின்கீழ் இயங்கும் இந்திராகாந்தி பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் படிக்க விரும்புவோர் இந்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பைப் படித்திருத்தல் வேண்டும். மேலும் முதுநிலைப் பட்டயப்படிப்பு படிக்க விரும்புவோர் இந்தியக் கல்வி நிறுவனங்களில் குறிப்பிட்ட துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருத்தல் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ள மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்திராகாந்தி பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான  www.igntu.ac.in சென்று  விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்கள் மே 5,6 தேதிகளில் நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்நுழைவுத் தேர்வானது ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தேர்வு மையங்களில் நடத்தப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 4.4.2018

- வெங்கட்

X