பொதுக்கொள்கை, முதுநிலைப் பட்டப்படிப்புக்கான அறிவிப்பு!

4/13/2018 11:54:06 AM

பொதுக்கொள்கை, முதுநிலைப் பட்டப்படிப்புக்கான அறிவிப்பு!

உலகப் பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்துவருகிறது. இந்தியாவில் பொதுக்கொள்கை குறித்த படிப்பின் அவசியத்தைக் கருதி பெங்களூரில் தேசியச் சட்டப் பள்ளி இந்தியப் பல்கலைக்கழகத்தில் (National Law School of India University (NLSIU), Bengaluru) பொதுக்கொள்கை குறித்த முதுநிலைப் பட்டப்படிப்புக்கான (Master Programme in Public Policy - MPP) விண்ணப்பிக்க நேரமிது.

கல்வித்தகுதி
இரண்டாண்டு கால, பொதுக்கொள்கை குறித்த முதுநிலைப் பட்டப்படிப்பு (Master Programme in Public Policy - MPP) (50 இடங்கள்), சேர்க்கைக்கு ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பம்
http://mpp.nls.ac.in/ இணையதளத்தில் ரூ.1000/- கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். அல்லது இணையதளத்திலிருக்கும் விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்து நிரப்பி, ரூ.1000/-க்கு ”Registrar, National Law School of India University” எனும் பெயரில் பெங்களூருவில் மாற்றிக்கொள்ளக்கூடிய வங்கி வரைவோலையினை இணைத்து ”Admission Coordinator, Master of Public Policy, National Law School of India University, Nagarbhavi, Bangalore 560072” முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்பி வைக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20-4-2018.

திறனாய்வுத் தேர்வு
பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, கவுகாத்தி மற்றும் மும்பை ஆகிய ஐந்து இடங்களில் 29-4-2018 அன்று ‘கொள்கைத் திறனாய்வுத் தேர்வு’ (Public Policy Test) நடைபெறும். தேர்வுக்கான அனுமதி அட்டை 25-4-2018 அன்று இணையதளத்தில் தரவிறக்கம் செய்யலாம். தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக்கொண்டு தேர்வானவர்களுக்கு 25-5-2018 மற்றும் 26-5-2018 பெங்களூருவில் நேர்காணல் நடைபெறும். நிர்ணயிக்கப்பட்ட 50 இடங்களில் எஸ்.சி - 15%, எஸ்.டி - 7.5%, மாற்றுத்திறனாளிகள் - 3%, மீதமுள்ள இடங்கள் பொதுப்பிரிவு என தகுதியுடைய மாணவர்களின் தேர்வுப்பட்டியல் 29-5-2018 அன்று வெளியிடப்படும்.

மாணவர் சேர்க்கை
தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் 15-6-2018 ஆம் தேதிக்குள் பயிற்சிக் கட்டணத்தினைச் செலுத்தி, சேர்க்கையினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். (பொதுப்பிரிவினர் ஆண்டுக்கு ரூ 2,18,700/-, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ரூ.2,16,200/-) சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு 1-7-2018 முதல் வகுப்புகள் தொடங்கும்.   

கூடுதல் தகவல்கள்
http://mpp.nls.ac.in/ இணையதளத்தினைப் பார்வையிடலாம். ‘‘Admission Coordinator, Master of Public Policy, National Law School of India University, Nagarbhavi, Bangalore 560072” முகவரியிலோ, 080 - 23213160, 23160532, 23160533, 23160535 தொலைபேசி எண்களிலோ அல்லது admission4publicpolicy@nls.ac.in மற்றும் phdinpublicpolicy@nls.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்புகொள்ளலாம்.

முத்துக்கமலம்

X