பார்டென்டர்

4/27/2018 2:44:37 PM

பார்டென்டர்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

அட்மிஷன்

பயிற்சியில் சேர அரிய வாய்ப்பு!

நாளுக்கு நாள் வளர்ச்சியடையும் தொழில்நுட்பத்தாலும் மற்றும் உலகமயமாக்கலின் விளைவாலும் உலகம் முழுவதும் வாழ்க்கைச் சூழலுக்கேற்ப புதுப் புது படிப்புகள் (கோர்ஸ்கள்) அவ்வப்போது துளிர்விடுகின்றன. அவ்வகையில் இளைய தலைமுறையினரிடையே இப்போது பார்டென்டிங் எனும் கோர்ஸானது புது டிரெண்டாகி வருகிறது.

பேச்சுலர் பார்ட்டி, பர்த்டே பார்ட்டி, வீக்கெண்ட் பார்ட்டி என கொண்டாட்டங்களைப் போற்றும் இன்றைய நவநாகரிக உலகில் பப், கிளப், பார்ட்டி போன்றவற்றில் பார்டென்டர்களின் பணி என்பது இன்றியமையாததாக உள்ளது. மிக்ஸாலஜி, பாட்டில்களில் சாகசம் செய்வது போன்ற தொழில்முறை பார்டென்டர்களின் டிமாண்ட் சேவை தொழில்துறைகளில் பெருகிவருகிறது. இது ஒரு கலையாகவே கருதப்படுகிறது. மிக்ஸிங், பாட்டிலை சுழட்டுவது என சாகச செயல்பாடுகளைக் கொண்டுள்ளதால் இப்படிப்பை படிப்பதை விட விளையாட்டாக கற்றுக் கொள்ளலாம் என்பதால் உற்சாகமான படிப்பாக கருதப்படுகிறது.

தினமும் நல்ல வருமானம், சிறந்த பார்ட் டைம் ஜாப், நாளுக்கு நாள் அதிகமாகும் பார்டென்டர்களின் தேவைகள் , வயது வரம்பு தேவைப்படாதது என இத்துறையின் சிறப்பியல்புகள் இளைஞர்களை அதிகம் கவருகின்றன. வளர்ந்துவரும் துறையாக கணிக்கப்படும் இத்துறையைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு சிறந்த தரத்தில் பார்டென்டிங் கோர்ஸை வழங்குகிறது சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் பார்டென்டிங்.

பார்டென்டிங் அடிப்படைக்கான இரண்டு வார கோர்ஸ்கள், தொழில்முறை பார்டென்டருக்கான மூன்று மாதம் கோர்ஸ் மற்றும் ஆறு மாத கால கோர்ஸான அட்வான்ஸ்டு பார்டென்டிங் போன்ற கால வேறுபாடு அளவிலான கோர்ஸ்களை வழங்குகிறது நல்லசாமி பார்டென்டிங் கல்வி நிறுவனம்.

மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே சம்பாதிக்கும் வகையில் படிக்கும்போதே தனியார்களின் பார்ட்டிகளை ஏற்று நடத்த அனுமதிக்கபடுதல் மற்றும் வேலை வாய்ப்பு உறுதி செய்தல் என மாணவர்களுக்கு சிறந்த கல்விச் சேவையை வழங்குகிறது இந்நிறுவனம்.

இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் பார்டென்டிங் நிறுவனத்தில் பயிற்சி மேற்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு nallacibt@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம் அல்லது www.cibt.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- வெங்கட்

X