பகுதிநேர B.E., B.Tech. படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

5/7/2018 11:51:07 AM

பகுதிநேர B.E., B.Tech. படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வருகிற 2018-19-ம் கல்வி ஆண்டில், பகுதிநேர பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதன்படி கோவை அரசு பொறியியல் கல்லூரி (ஜி.சி.டி.), சேலம் அரசு பொறியியல் கல்லூரி, நெல்லை அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி, கோவை தொழில்நுட்பக் கல்லூரி (சி.ஐ.டி.), மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் பகுதிநேர பி.இ., பி.டெக் ஆகிய வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன.

கல்வித்தகுதி: இந்தப் படிப்புகளில் சேர டிப்ளமோ படிப்புகளை முடித்து 2 ஆண்டு கள் நிறைவடைந்தவர்கள் மற்றும் டிப்ளமோ முடித்து 2 ஆண்டுகள் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் மட்டுமே தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: பகுதிநேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விரும்புபவர்கள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது பின்வரும் சான்றிதழ் நகல்களையும் இணைக்க வேண்டும். மே 10-ம் தேதி 4 மணிக்குள் http://www.ptbe-tnea.com என்ற முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற ஜூன் மாதம் 2-ம் தேதி நடைபெறுகிறது.

*S.S.L.C. Mark Sheet
*Community Certificate issued by the Revenue Authorities
*All Semester Mark Sheets for the Diploma Examinations
*Diploma Certificate
*Transfer Certificate
*The following Certificates received from the Present Employer No Objection Certificate Present Working Experience CertificateCopy of TNGST / CST / TIN / RC / License Number or   Recent Sales Tax Payment Receipt / Registrar of companies Registration Certificate / Certificate of any Statutory Body  

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.600, எஸ்.சி., எஸ்.சி.(ஏ)., எஸ்.டி. பிரிவினர் ரூ.300 விண்ணப்பக் கட்டணத்தை ‘The Secretary, Part Time B.E./B.Tech. Admissions 2018-2019, Coimbatore-641014’ என்ற பெயரில் கோவையில் மாற்றத்தக்க வகையில் DD எடுத்து, அந்த விவரத்தையும் ஆன்லைனில் இணைக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து DD இணைத்து The Secretary, Part Time B.E./B.Tech. Admissions 2018-2019, Coimbatore Institute of Technology, Civil Aerodrome (PO), Coimbatore-641014 என்ற முகவரிக்கு 12.5.2018க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கவேண்டும்.   
மேலும் விவரங்களை அறிய www.ptbe-tnea.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.  

X