மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை!

6/25/2018 2:22:07 PM

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்திய அரசின் சமூக நீதி மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் 2005ம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நிறுவப்பட்டதுதான் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அதிகாரமளித்தல் கல்வி நிறுவனம் (National Institute For Empowerment of Persons With Multiple Disabilities).

மத்திய அரசின் திவ்யாஞ்ஜன் (Divyangan) எனும் திட்டத்தின் கீழ் இந்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கல்வி நிறுவனமானது தேசிய அளவில் உள்ள பல்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள், யாரையும் சாராமல் சுயமாக வாழும் நோக்கில் பல்வேறு சிறப்புப் படிப்புகளை வழங்கிவருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான இத்தேசிய கல்வி நிறுவனத்தில் 2018-19 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான இத்தேசிய கல்வி நிறுவனத்தில் மொத்தம் 11 வகையான படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது. Bachelors of Audiology and Speech Language Pathology (BASLP - 4 வருடம்), PG Diploma in Developmental Therapy, PG Diploma in Early Intervention (PGDEI - 1 வருடம்), B.Ed Special Education in Multiple Disabilities /Autism Spectrum Disorder /Deafblindness (2 வருடம்), M.Ed Special Education in Autism Spectrum Disorder (2 வருடம்), M.Ed Special Education in Multiple Disabilities (2 வருடம்), D.Ed Special Education in Autism Spectrum Disorder / Cerebral Palsy / Deafblindness  (2 வருடம்), D.Ed Special Education in Multiple Disabilities (2 வருடம்), Certificate Course in Care Giving (A level) (3 மாதம்),  Certificate Course in Care Giving (B level - 6 மாதம்), Certificate Course in Care Giving (Senior -10 மாதம்) ஆகிய படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான இத்தேசிய கல்வி நிறுவனத்தில் பல்வேறு வகையான படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருப்பதால் மாணவர்களுக்கான கல்வித் தகுதியும் மற்றும் வயது வரம்பும் ஒவ்வொரு படிப்பிற்கும் மாறுபடுகிறது. ஆகையால் மாணவர்கள் www.niepmd.tn.nic.in என்ற இணையதளம் சென்று தங்கள் துறைக்கான கல்வித் தகுதியையும் வயது வரம்பையும் அறிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை

இந்திய அரசின் கல்வி நிறுவனத்தில் பயில விரும்பும் மாணவர்கள் தங்களுக்கான துறையை தேர்ந்தெடுத்த பின்னர் www.niepmd.tn.nic.in என்ற இணையதளம் சென்று தங்கள் துறைக்கான விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து ‘DIRECTOR NIEPMD, ECR, MUTTUKADU KOVALAM (P.O), CHENNAI - 603 112 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவேண்டும்.

மேலும் Bachelors of Audiology and Speech Language Pathology (4 வருடம்), PG Diploma in Developmental Therapy, PG Diploma in Early Intervention (PGDEI-1 வருடம்), B.Ed Special Education in Multiple Disabilities /Autism Spectrum Disorder / Deaf blindness (2 வருடம்), M.Ed Special Education in Autism Spectram Disorder (2 வருடம்), M.Ed Special Education in Multiple Disabilities (2 வருடம்) போன்ற துறைகளைத் தேர்ந்தெடுத்த பொதுப்பிரிவு மாணவர்கள் ரூ.500-ம் எஸ்.சி / எஸ்.டி மாணவர்கள் ரூ.350-ம் மற்றும் D.Ed Special Education in Multiple Disabilities (2 வருடம்) துறையைத் தேர்ந்தெடுத்த பொதுப்பிரிவு மாணவர்கள் ரூ.300-ம் எஸ்.சி /எஸ்.டி மாணவர்கள் ரூ.200-ம் மற்றும் Certificate Course in Care Giving (Senior - 10 மாதம்) துறையைத் தேர்ந்தெடுத்தவர்கள் ரூ.100-ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு துறைக்கும் விண்ணப்பிக்கும் தேதிகள் மாறுபடுகின்றன. (17.7.2018 முதல் 15.8.2018 வரை). ஆகையால் மாணவர்கள் www.niepmd.tn.nic.in என்ற இணையதளம் சென்று தங்கள் துறைக்கான விண்ணப்பிக்கும் தேதிகளை அறிந்துகொள்ளலாம்.

மாணவர் சேர்க்கை முறை

பொது எழுத்துத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். Bachelors of Audiology and Speech Language Pathology (4 வருடம்) துறைக்கு தேசிய பொது நுழைவுத்தேர்வும் மற்றும் Certificate Course in Care Giving (A level - 3 மாதம்), Certificate Course in Care Giving (B level - 6 மாதம்), Certificate Course in Care Giving (Senior - 10 மாதம்) ஆகிய துறைகளுக்கு ஆப்டிடியூட் டெஸ்ட் என ஒவ்வொரு துறைக்கும் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் எடுக்கும்  மதிப்பெண்கள் அடிப்படையில் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது. எழுத்துத் தேர்வுக்கான முக்கிய தேதிகளை மாணவர்கள் இணையதளம் சென்று அறிந்துகொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு www.niepmd.tn.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- வெங்கட்

X