குற்றம் மற்றும் தடயவியலில் முதுகலைப் பட்டம் படிக்கலாம்!

7/11/2018 11:32:34 AM

குற்றம் மற்றும் தடயவியலில் முதுகலைப் பட்டம் படிக்கலாம்!

நாளுக்கு நாள் நம் வாழ்க்கை முறையும் அத்தியாவசிய தேவைகளும் அதிகமாகிக்கொண்டே போகின்றன. ஆனால், அவற்றுக்கேற்ற பொருளாதார நிலைமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. மனிதன் தன் ஆசைகளையும், தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள தவறான பாதையைத் தேர்வு செய்வதிலிருந்து குற்றம் ஆரம்பமாகின்றது. அதிலும் வெகுவேகமாக மாறிவரும் நம் நவீனயுகத்தில் குற்றங்களின் அளவும் அதிகமாக மட்டுமல்ல நினைத்துப்பார்க்க முடியாத கோணங்களிலும் நிகழ்வதை ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. குற்றங்களைக் கட்டுப்படுத்த காவல்துறை உள்ளது.

ஆனாலும், காவல்துறையே கண்டுபிடிக்க இயலாமல் சிக்கலான குற்றங்கள் நிகழும்போது குற்றவாளிகளையும், குற்றச் சம்பவங்களுக்கான காரணங்களையும் தடயங்களைக்கொண்டு அறிவியல் பூர்வமாகக் கண்டறிய உதவுவது குற்றம் மற்றும் தடயவியலாகும். அறிவியல் கோட்பாடுகள், தொழில்நுட்பங்கள் இவற்றைப் பயன்படுத்தி, குற்றங்களின் உண்மையைக் கண்டறிவதுதான் இத்துறையின் அடித்தளம். சைபர் ஃபோரன்சிக், டிஜிட்டல் ஃபோரன்சிக் போன்ற நவீன யுக்திகள் இத்துறையில் தற்போது பயன்பாட்டில் உள்ளன. தில்லாகவும் த்ரில்லாகவும் படிக்க விரும்புவோருக்கு ஏற்ற மத்திய அரசின் புலனாய்வுத் துறையிலேயே வேலைவாய்ப்பு தரக்கூடிய பட்டப்படிப்புகள் இதில் உள்ளன. குஜராத் ஃபோரன்சிக் சயின்ஸஸ் யுனிவர்சிட்டி குற்றம் மற்றும் தடயவியல் படிப்புகளைச் சிறப்பாக வழங்கிவருகிறது.

1. இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபோரன்சிக் சயின்ஸ்
2. இன்ஸ்டிடியூட் ஆஃப் பிஹேவியரல் சயின்ஸ்
3. இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் - என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.

குற்றம் மற்றும் தடயவியல் படிப்புகளில் சேர்ந்து படிக்கத் தேவையான தகுதிகள்
1. முழுநேர எம்.எஸ்சி. ஃபோரன்சிக் சயின்ஸ் 2 ஆண்டுகள் - (4 செமஸ்டர்கள்): இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க அறிவியல், மருத்துவம், பொறியியல், மருந்தாக்கம் ஆகிய பாடங்களில் பொதுப் பிரிவினர் குறைந்தது 55%, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

2. முழுநேர எம்.எஸ். டிஜிட்டல் ஃபோரன்சிக் சயின்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன் அஸ்சூரன்ஸ் 2 ஆண்டுகள் (4 செமஸ்டர்கள்): இப்படிப்பிற்கு இயற்பியல், கணினி அறிவியல், செய்தித் தொழில்நுட்பம் இவற்றில் இளநிலைப் பட்டம் அல்லது கணினி, செய்தித் தொழில்நுட்பம் இவற்றில் பி.இ. அல்லது கணினி, செய்தித் தொழில்நுட்பம் பாடங்களில் பி.டெக். படிப்பில், பொதுப் பிரிவினர் குறைந்தது 55%, எஸ்.சி., எஸ்டி. பிரிவினர் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

3. முழுநேர மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் - ஹோம்லேண்ட் செக்யூரிட்டி அண்ட் ஆண்டி டெர்ரரிஸம் 2 ஆண்டுகள் -
(4 செமஸ்டர்கள்): இப்படிப்பிற்கு  அறிவியல், மருத்துவம், பொறியியல், மருந்தாக்கம்
ஆகிய பாடங்களில் இளநிலைப் பட்டப்படிப்பில் பொதுப் பிரிவினர் குறைந்தது 55%, எஸ்.சி., எஸ்.டி. 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

4. முழுநேர எம்.டெக். சைபர் செக்யூரிட்டி அண்ட் இன்சிடெண்ட் ரெஸ்பான்ஸ் 2 ஆண்டுகள் - (4 செமஸ்டர்கள்): இப்படிப்பிற்குக் கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், கம்யூனிகேசன் பாடங்களில் பி.இ. அல்லது பி.டெக். அல்லது பி.எஸ். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. முழுநேர மாஸ்டர் - ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் 2 ஆண்டுகள் - (4 செமஸ்டர்கள்): இப்படிப்பிற்கு குறைந்தது 55% மதிப்பெண்களுடன் எந்த பாடத்திலாவது இளநிலைப் பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

6. முழுநேர பி.ஜி. டிப்ளமோ இன் ஃபிங்கர் பிரின்ட் சயின்ஸ் ஒரு ஆண்டு - (2 செமஸ்டர்கள்): இப்படிப்பிற்கு அறிவியல், மருத்துவம், பொறியியல், மருந்தாக்கம் ஆகிய பாடங்களில் இளநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

7. முழு நேர  பி.ஜி. டிப்ளமோ இன் ஃபோரன்சிக் அக்கவுன்டிங் ஒரு ஆண்டு - (2 செமஸ்டர்கள்): இப்படிப்பிற்கு கணக்கியல், கணினி இவற்றின் அடிப்படை அறிவுடன் ஏதேனும் ஒரு இளநிலை அறிவியல் படித்திருக்க வேண்டும்.

8. முழுநேர பி.ஜி. டிப்ளமோ இன் ஃபோரன்சிக் டாக்குமென்ட் எக்ஸாமினேசன் ஒரு ஆண்டு - (2 செமஸ்டர்கள்): இப்படிப்பிற்கு அறிவியல், மருத்துவம், பொறியியல், மருந்தாக்கம் ஆகிய ஏதேனும் ஒரு பாடத்தில்  குறைந்தது 50% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் படித்திருக்க வேண்டும்.

9. பி.ஜி. டிப்ளமோ இன் ஃபோரன்சிக் மேனேஜ்மென்ட் ஒரு ஆண்டு - (2 செமஸ்டர்கள்): இப்படிப்பிற்கு அறிவியல், பொறியியல், மருந்தாக்கம் ஆகிய ஏதேனும் ஒரு பாடத்தில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன்  இளநிலை அறிவியல் பட்டம் படித்திருக்க வேண்டும்.

10. ஒரு ஆண்டு முழுநேர, போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் ஃபோரன்சிக் நர்ஸிங்: இப்படிப்பிற்கு நர்ஸிங்கில் பொதுப் பிரிவினர் குறைந்தது 55% மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி. 50% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
 
இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபோரன்சிக் சயின்ஸ் தரும் படிப்புகள் சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகள்
* சைபர் க்ரைம் இன்வஸ்டிகேசன்
* கம்ப்யூட்டர் ஃபோரன்சிக்
* சைபர் செக்யூரிட்டி

ஆன்லைனில் வழங்கப்படும் சான்றிதழ் படிப்புகள்
* இன்ஃபர்மேசன் செக்யூரிட்டி
* எலக்ட்ரானிக் எலிட்னஸ் எக்ஸாமினர்
* ஃபோரன்சிக் அக்கவுன்ட்ஸ்

இன்ஸ்டிடியூட் ஆஃப் பிகேவியரல் சயின்ஸ் தரும் படிப்புகள்
* டாக்டர் ஆஃப் பிலாஸபி
* எம்.பில். கிளினிக்கல் சைக்காலஜி
* எம்.பில். ஃபோரன்சிக் சைக்காலஜி
* எம்.எஸ்சி. நியூரோ சைக்காலஜி
* எம்.எஸ்சி. ஃபோரன்சிக் சைக்காலஜி
* எம்.எஸ்சி. கிளினிக்கல் சைக்காலஜி
* எம்.எஸ்சி. நியூரோ என்டர்பிரனர்ஷிப்
* எம்.எஸ்சி. நியூரோ டெக்னாலஜி
* பி.ஜி. டிப்ளமோ இன் ஃபோரன்சிக்

சைக்காலஜி
* பி.ஜி. டிப்ளமோ இன் சைல்டு சைக்காலஜி
* எம்.ஏ/எம்.எஸ்சி - கிரிமினாலஜி

இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் தரும் படிப்புகள்
* எம்.எஸ். ஃபோரன்சிக் பார்மசி
* எம்.எஸ். ஃபோரன்சிக் நானோ டெக்னாலஜி
* எம்.எஸ்சி. மெடிக்கல் டிவைசஸ்
* எம்.எஸ். என்விரன்மென்டல் சயின்ஸ்
* எம்.எஸ். என்விரன்மென்டல் மேனேஜ்மென்ட்
* எம்.எஸ். கெமிஸ்ட்ரி
* ஃபோரன்சிக் பார்மசியில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்.-பிஎச்.டி.
* ஃபோரன்சிக் நானோ டெக்னாலஜியில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்.-பி.எச்டி.

விண்ணப்பிப்பது எப்படி?
தடயவியல் துறையில் பட்டம் பெற விரும்பும் மாணவர்கள் www.gfsu.edu.in என்ற இணைய தளம் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன் விண்ணப்பக் கட்டணம், தேர்வுமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாகப் படித்துப் பார்த்து விண்ணப்பிக்கவும். இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களை அறிய விரும்புவோர் ‘Gujarat Forensic Sciences University, Sector 9, Gandhinagar-382007, Gujarat India என்ற முகவரியிலோ அல்லது Institute of Research and Development  09825318996, Institute of Forensic Science- 09978425121, Institute of Behavioral Science - 09426922747 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.               

- வசந்தி ராஜராஜன்

X