தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை

7/24/2018 3:30:11 PM

தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை

நன்றி குங்குமம் சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி

நேஷனல் பவர் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட் எனப்படும் என்.பி.டி.ஐ. நிறுவனம் ஐ.எஸ்.ஓ. 9001 மற்றும் ஐ.எஸ்.ஓ. 14001 தரச்சான்று பெற்ற தேசிய கல்வி நிறுவனமாகும். பரீதாபத்தில் தலைமையகமாகக்கொண்டு இயங்கிவரும் இந்த அமைப்பு எரிசக்தித் துறையில் போதுமான மனிதவள மேம்பாட்டை உருவாக்குவதை தலையாயக் கடமையாகக் கொண்டுள்ளது. 1965ஆம் ஆண்டு இந்திய மின்துறை அமைச்சகத்தால் தேசிய அளவில் நிறுவப்பட்டது. நாடு முழுவதும் பல கிளைகளைக் கொண்ட இந்நிறுவனமானது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது.  

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பாக செயல்பட்டுவரும் இந்நிறுவனம் மின்துறைகளில் சர்வதேச தரத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதோடு, வேலைவாய்ப்புகளையும் உருவாக்கிவருகிறது. மேலும் உலக அளவில் இயங்கும் செயல்திறன் மிகுந்த மின்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனத்தின் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் செயல்பட்டுவரும் மையத்தில் 26 வார கால அளவிலான போஸ்ட் கிராஜுவேட் டிப்ளோமா இன் டிரான்ஸ்மிஷன் அண்ட் டிஸ்டிரிபியூஷன் சிஸ்டம்ஸ் கோர்ஸுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

மின் துறைகளில் தொழில் முறையிலும், தொழில்நுட்ப நேர்த்தியுடனும் செயல்படும் விதமாக மனிதவளங்களை உருவாக்குவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது தான் இப்படிப்பு. 26 வார கால அளவிலான இப்படிப்பானது மின் கடத்தல் மற்றும் மின்சாரம் பகிர்ந்தளித்தல் என்பன போன்ற மின்துறை சார்ந்த பொறியியல் பாடப்பிரிவுகளைக் கொண்டுள்ளது.

கல்வித் தகுதி: இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் அல்லது எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் அல்லது பவர் எஞ்சினியரிங் போன்ற பொறியியல் துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் அவசியம்.

மாணவர் சேர்க்கை முறை: முதுகலை பட்டயப்படிப்பில் சேர இளங்கலையில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வுக்கு உட்படுத்தப்பட்டு  மாணவர் சேர்க்கையானது நடத்தப்படும். மேலும் இந்திய அரசின் விதிகளின்படி பிற்படுத்தப்பட்டோருக்கான மாணவர் சேர்க்கையானது நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்திய அரசின் இப்பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் www.nptibangalore.in என்ற இணையதளம் சென்று விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து ரூ.500க்கான வரைவோலை வாங்கி விண்ணப்பப் படிவத்துடன் சேர்த்து National Power Training Institute - PSTI, subramanyapura Road, Banashankari-II Stage, Near Yarab Nagar Bus Stop, Bangalore  560 070 என்ற முகவரிக்கு  26.7.2018 க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்கள் அறிய www.nptibangalore.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- துருவா

X