ஐ.ஐ.எம்-ல் முதுநிலை நிர்வாக மேலாண்மைப் பட்டம் படிக்கலாம்!

8/6/2018 4:49:26 PM

ஐ.ஐ.எம்-ல் முதுநிலை நிர்வாக மேலாண்மைப் பட்டம் படிக்கலாம்!

குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி     

இந்திய மேலாண்மை கழகங்கள் (Indian Institute of Management -IIM) என்பது இந்தியாவிலுள்ள சிறப்பான பட்டமேற்படிப்பு மேலாண்மை பள்ளிகளாகும். அவை மேலாண்மை கல்வி வழங்குவது, ஆய்வுகள் மேற்கொள்வதுடன் இந்திய பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலும் மேலாண்மை தொடர்பான கருத்துரைகள் வழங்கிவருகின்றன.

இந்திய மாணவர்களில் அறிவில் சிறந்தவர்களைக் கண்டெடுத்து அவர்களுக்கு உலகின் தலைசிறந்த மேலாண்மைக் கல்வியை அளித்து இந்திய பொருளாதாரத்தின் பல துறைகளிலும் சிறப்பான வழிகாட்டிடும் மேலாளர் வளத்தை அமைத்திடும் நோக்கத்துடன் இந்திய அரசு இக்கல்வி நிறுவனங்களை உருவாக்கின. இவை நாட்டின் தலைசிறந்த மேலாளர்களை உருவாக்குவதில் முன்னணியில் இருப்பதுடன் உருவாகும் புதிய துறைகளிலும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது.

இவை உலகின் தலைசிறந்த மேலாண்மை கல்விக்கூடங்களுக்கு இணையாக கல்வி வழங்கல், ஆய்வுகள் மற்றும் தொழில்முறை கருத்துரைகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.  இந்தியாவின் தலைசிறந்த மேலாண்மைப் பள்ளிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றுதான் கோழிக்கோடு (Indian Institute of Management, Kozhikode). இதை இந்திய அரசு 1996 ஆம் ஆண்டு நிறுவியது. மேலும் இது ஐந்தாவதாக நிறுவப்பட்ட இந்திய மேலாண்மை கழகம் (ஐஐஎம்) ஆகும். இதில் முதுநிலை நிர்வாகப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வழங்கப்படும் படிப்பு: எக்சிகியூட்டிவ் போஸ்ட் கிராஜுவேட் புரொகிராம் (இ.பி.ஜி.பி.,)கல்வித் தகுதி: இளநிலைப் பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ’கேட்’ அல்லது ‘ஜிமேட்’ தேர்வு மதிப்பெண் அவசியம். இத்தேர்வுகளில் பங்கு பெறாத மாணவர்களுக்கு ‘இமேட்’ (எக்சிகியூட்டிவ் மேனேஜ்மெண்ட் ஆப்டிடியூட் டெஸ்ட்) எனும் நுழைவுத் தேர்வு பிரத்யேகமாக நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஐ.ஐ.எம்., கோழிக்கோடு கல்வி நிறுவனத்தின் www.iimk.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்தப் படிப்பிற்கான விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். தகுதி தேர்வுகளில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வின் மூலம் சேர்க்கை நடத்தப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 13.8.201. மேலும் விவரங்களுக்கு www.iimk.ac.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.

X