தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டம் படிக்கலாம்!

8/21/2018 4:00:25 PM

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டம் படிக்கலாம்!

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி     

நாகப்பட்டினத்திலிருக்கும் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Fisheries University (தற்போது Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University (TNJFU) என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது) வழங்கும் முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc. - Master of Fisheries Science), மற்றும் மீன்வள அறிவியல் முனைவர் (Ph.D), பருவநிலை மாற்றம் மற்றும் மீன்வள ஆய்வு (M.Phil) படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc)தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின்கீழ் தூத்துக்குடி மற்றும் பொன்னேரி ஆகிய இரு இடங்களில் செயல்பட்டுவரும் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனங்களில் (Fisheries College and Research Institute) தூத்துக்குடியிலுள்ள கல்லூரியில் 1. Aquaculture - 4, 2. Aquatic Animal Health - 3, 3. Aquatic Environment Management - 2, 4. Fisheries Economics - 2, 5. Fisheries Engineering and Technology - 2, 6. Fisheries Extension - 2, 7. Fish Processing Technology - 3, 8. Fisheries Resource Management - 2, 9. Fish Quality Assurance and Management - 3, 10. Fish Biotechnology - 1 என்று மொத்தம் 10 பிரிவுகளில் முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc) படிப்பிற்கு 24 இடங்கள் இருக்கின்றன. பொன்னேரியிலுள்ள கல்லூரியில் Aquaculture எனும் பிரிவில் மட்டும் 4 இடங்கள் இருக்கின்றன.

கல்வித் தகுதி் : முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc) படிப்பிற்கு விண்ணப்பிக்கத் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் வழங்கிய நான்காண்டு கால அளவிலான இளநிலை மீன்வள அறிவியல் (B.F.Sc) பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பட்டப் படிப்பில் 65% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். தரக்குறியீடு (Grade) எனில் மேற்காணும் மதிப்பெண்ணுக்கு இணையான 6.5 குறியீட்டைப் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

மொத்தமுள்ள இடங்களில் 75% இடங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்காகவும், 25% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்கள், பின்னர் மாநில ஒதுக்கீட்டில் நிரப்பப்படும். இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பை வேறு மாநிலங்களில் படித்த தமிழ்நாட்டு மாணவர்கள் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு இருப்பிடச் சான்றிதழைப் பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும். முந்தைய ஆண்டுகளில் முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc) படிப்பில் சேர்ந்து, படிப்பைத் தொடர முடியாமல் இடையில் விட்டுவிட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.

மாணவர் தேர்வு முறை

* முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc) படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, கீழ்க்காணும் அட்டவணையில் கண்ட மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும்.
 
* எஸ்சி., எஸ்டி பிரிவு மாணவர்கள் குறைந்தது நுழைவுத்தேர்வில் 35% மதிப்பெண்களும், பிற பிரிவினர் 40% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

* மாணவர் சேர்க்கையில் இருவர் சமமான மதிப்பெண்கள் பெற்றிருக்கும் நிலையில் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவருக்குச் சேர்க்கை அளிக்கப்படும். நுழைவுத் தேர்வு மதிப்பெண்களும் சமமாக இருக்கும் நிலையில், அவர்கள் கல்வித் தகுதிக்கான படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவருக்குச் சேர்க்கை அளிக்கப்படும். அதுவும் சமமாக இருக்கும் நிலையில் பிறந்த தேதியைக்கொண்டு வயது அதிகமிருப்பவருக்குச் சேர்க்கை அளிக்கப்படும்.

* தகுதியுடைய மாணவர்கள் மட்டும் தகுதி அடிப்படையில் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

மீன்வள அறிவியல் முனைவர் (Ph.D)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் (Fisheries College and Research Institute) 1. Aquaculture - 5, 2. Aquatic Environment Management - 2, 3. Fisheries Economics - 3, 4. Fisheries Extension - 2, 5. Fish Processing Technology - 2, 6. Fisheries Resource Management - 3, 7. Fish Quality Assurance and Management - 2 என்று மொத்தம் 7 பிரிவுகளில் மீன்வள அறிவியல் முனைவர் (Ph.D) பட்டத்திற்கான படிப்பிற்கு 19 இடங்கள் இருக்கின்றன.
பொன்னேரியிலுள்ள கல்லூரியில் Aquaculture எனும் பிரிவில் மட்டும் 5 இடங்கள் இருக்கின்றன.

கல்வித் தகுதி் : மீன்வள அறிவியல் முனைவர் (Ph.D) படிப்பிற்கான அனைத்து இடங்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இளநிலை மீன்வள அறிவியல் (B.F.Sc) மற்றும் முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc) பட்டப்படிப்பை வேறு மாநிலங்களில் படித்த தமிழ்நாட்டு மாணவர்கள் இருப்பிடச் சான்றிதழ் பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த இடங்களில் சேராமல் ஏற்படும் காலியிடங்கள் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்பப்படும்.

முனைவர் பட்டத்தின் ஒவ்வொரு பிரிவிற்கும், அதற்கான சிறப்புப் (Specialization) பாடங்களைக் கொண்ட முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc) படிப்பில் 65% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். தரக்குறியீடு (Grade) எனில் மேற்காணும் மதிப்பெண்ணுக்கு இணையான 6.5 குறியீட்டைப் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. தனிச்சிறப்பு குறித்த பட்டியல் கையேட்டில் இடம்பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டுகளில் முனைவர் பட்டப்படிப்பில் சேர்ந்து படிப்பைத் தொடர முடியாமல் இடையில் விட்டுவிட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.

மாணவர் தேர்வுமுறை

* மீன்வள அறிவியல் முனைவர் (Ph.D) படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, கீழ்க்காணும் அட்டவணையில் கண்ட மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும்.
எஸ்சி., எஸ்டி பிரிவு மாணவர்கள் நுழைவுத்தேர்வில் குறைந்தது 35% மதிப்பெண்களும், பிற பிரிவினர் 40% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

பருவநிலை மாற்றம் மற்றும் மீன்வள ஆய்வு படிப்பு (M.Phil) தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின்கீழ் தூத்துக்குடி மற்றும் பொன்னேரி ஆகிய இரு இடங்களில் செயல்பட்டுவரும் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனங்களில் (Fisheries College and Research Institute) பருவநிலை மாற்றம் மற்றும் மீன்வளப் பட்டயப்படிப்பிற்கு  (M.Phil) மொத்தம் நான்கு இடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன.

கல்வித் தகுதி : பருவநிலை மாற்றம் மற்றும் மீன்வள ஆய்வுப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 60% மதிப்பெண்களுடன் அறிவியல் துறைகளில் முதுநிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். எஸ்சி., எஸ்டி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

மாணவர் தேர்வுமுறை

பருவநிலை மாற்றம் மற்றும் மீன்வள ஆய்வு (M.Phil) படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, கீழ்க்காணும் அட்டவணையில் கண்ட மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும். எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்கள் நுழைவுத்தேர்வில் குறைந்தது 35% மதிப்பெண்களும், பிற பிரிவினர் 40% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்காணும் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://tnfu.ac.in/ எனும் இணையதளத்திற்குச் சென்று, இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி பிரிவினர் ரூ.500, பிற பிரிவினர் ரூ.1000 என்று விண்ணப்பக் கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 27.8.2018.

நுழைவுத் தேர்வு : விண்ணப்பித்தவர்களில் தகுதியுடையவர்களுக்கு மின்னஞ்சல் வழியாக நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் அனுப்பப்படும். அனைத்துத் தொடர்புகளும் மின்னஞ்சல் வழியில் மட்டுமே இருக்கும். நுழைவுத் தேர்வு 01.9.2018 அன்று நடைபெறும். நுழைவுத் தேர்வு நடைபெறும் இடம், நுழைவுச்சீட்டு (Hall Ticket) போன்றவை மேற்காணும் இணையதளத்தில் இடம்பெறும்.

நுழைவுச் சீட்டினை இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். அதனைத் தொடர்ந்து, தரப்பட்டியல், கலந்தாய்வு, செலுத்த வேண்டிய கட்டணங்கள் போன்றவை குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியிடப்படும்.இந்தப் படிப்புகள் குறித்து, மேலும் கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள மேற்காணும் இணையதளத்தைப் பார்க்கவும்.

- வெங்கட்

X