கால்நடை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை!

9/5/2018 11:29:33 AM

கால்நடை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

படிப்பு:  

முதுநிலைப் பட்டம் மற்றும் முதுநிலை டிப்ளமோ

கல்வித் தகுதி:

12ம் வகுப்பில் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுத்துப் படித்து, கால்நடை படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கான விண்ணப்பத்தை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைப் பல்கலைக்கழக நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்ப வேண்டும்.

சேர்க்கை முறை:

பொது நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே அட்மிஷன் நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 7.9.2018

மேலும் விவரங்களுக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

X