தியானம் மற்றும் யோகாவில் ஆராய்ச்சி மேற்கொள்ள அரிய வாய்ப்பு!

11/22/2018 5:47:29 PM

தியானம் மற்றும் யோகாவில் ஆராய்ச்சி மேற்கொள்ள அரிய வாய்ப்பு!

நன்றி குங்குமம் கல்வி வழிக்காட்டி

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (Department of Science and Technology-DST) ‘சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆஃப் யோகா அண்ட் மெடிடேஷன்’ (SATYAM) எனும் ஓர் ஆராய்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நரம்பியல், உடலியல், உளவியல், தத்துவம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய யோகா மற்றும் தியான முறைகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்வதை நோக்கமாக கொண்டு
வடிவமைக்கப்பட்டது இத்திட்டம். மனித மனம், உடல் ஆகியவற்றில் யோகாவும் தியானமும் ஏற்படுத்தும் நேர்மறையான விளைவுகளை ஆய்வு செய்யும் இத்திட்டத்திற்கு 2018-19 ஆண்டிற்கான ஆராய்ச்சித் திட்டத்தில் ஆய்வாளர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை. ஆய்வுகள் யோகா மற்றும் மெடிடேஷனில் இரண்டு விதமான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஆராய்ச்சியாளர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

1.     யோகா மற்றும் தியான முறைகளால் மனம் மற்றும் உடலில் ஏற்படும் விளைவுகளை ஆராய்வது.
2.    உடலியல் இயக்கங்கள் மற்றும் மூளை செயல்பாடுகள் மேம்பட யோகாவும் தியானமும் எவ்வாறு பயன்படுகின்றன என்பதற்கான ஆய்வு .
யோகா மற்றும் தியான முறைகளின் அடிப்படை இயக்கங்களை ஆராயும் இவ்வாய்வின் கால அளவு மூன்று ஆண்டுகள்.

தேவையான தகுதி: யோகா மற்றும் தியானங்களில் ஆய்வு பின்புலம் கொண்ட அறிவியலாளர்கள்/ கல்வியாளர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மேலும் இத்துறைகளில் ஆய்வுப் பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். கல்விநிறுவனத்தில் பணியாற்றும் ஆய்வாளர், ஆய்வுக்கு உதவும் வழிகாட்டி ஆசிரியரின் பயோடேட்டாவோடு தம்முடைய பயோடேட்டாவையும், நிறுவன முதல்வரின் ஒப்புதல் கையொப்பமிட்ட சான்றையும் ஒன்றிணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.dst.gov.in என்ற இணையதளத்தில் தம் பெயரை பதிவு செய்துகொண்டு பின்னர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவேண்டும். ஆய்வு குறித்து பூர்த்தி செய்த படிவத்தையும், ஆய்வுக்கான ஒப்புதல் சான்றிதழ்களை ஒன்றிணைத்து ‘SATYAM , Dr. Vandana sing, Scientist -E, Department of Science and Technology , Technology Bhavan, New Mehrauli Road, New Delhi  110016’ என்ற முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11. 2018.
மேலதிக தகவல்களுக்கு www.dst.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- வெங்கட்

X