மரைன் எஞ்சினியரிங் முதுநிலை பட்டயப்படிப்பில் மாணவர் சேர்க்கை!

11/26/2018 5:10:08 PM

மரைன் எஞ்சினியரிங் முதுநிலை பட்டயப்படிப்பில் மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

மும்பையில் உள்ள இந்தியன் கடல்சார் பல்கலைக்கழகம் (ஐ.எம்.யு.) மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவருகிறது. இதில் ஓர் ஆண்டு முதுநிலைப் பட்டயப்படிப்பான போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் மரைன் எஞ்சினியரிங் (பி.ஜி.டி.எம்.இ.) படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தேவையான தகுதிகள்: திருமணம் ஆகாத ஆண், பெண் ஆகிய இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், நேவல், ஆர்கிடெக்சர், ஆட்டோமொபைல் போன்ற பொறியியல் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இளநிலைப் பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு 5 சதவீதம் வரை மதிப்பெண்ணில் விலக்கு அளிக்கப்படும். நல்ல உடல் நலமும் தெளிவான கண் பார்வையும் இருக்க வேண்டியது முக்கியம்.
வயது வரம்பு: 28 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 33 வயதிற்குள் இருந்தால் போதுமானது. மொத்த இடங்கள் 40.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தை ஐ.எம்.யூ.- மும்பை கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைக் கல்வி நிறுவன முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30.11.2018

நேர்முகத் தேர்வு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை https://imumumbaiport.ac.in/online என்ற இணையதள முகவரியில் பார்க்கவும்.

X