தொழில்துறை மேலாண்மை முதுகலைப் பட்டப்படிப்புகள்!

12/26/2018 3:46:57 PM

தொழில்துறை மேலாண்மை முதுகலைப் பட்டப்படிப்புகள்!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டஸ்டிரியல் எஞ்சினியரிங் (NITIE) எனும் கல்வி நிறுவனம் மும்பையில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தொழில்முறைப் பயிற்சி பெற்ற திறன்மிக்க தொழில்துறை பொறியியலாளர்களை உருவாக்கும் நோக்கத்தோடு ஐ.நா மேம்பாட்டுத் திட்டம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்புகளின் உதவியுடன் 1963ம் ஆண்டு இந்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்படும் இக்கல்விநிறுவனம் தொழில்துறை பொறியியல், தொழில் மேலாண்மை, திட்ட மேலாண்மை சார்ந்த முதுகலைப் பட்டப்படிப்புகளை வழங்கிவருகிறது. தொழில்மேலாண்மை துறையில் தொடர்ந்து 50 வருடங்களாக சர்வதேச தரத்தில் மாணவர்களை உருவாக்கிவருகிறது. இக்கல்விநிறுவனத்தில் தொழில்துறை மேலாண்மை சார்ந்த முதுகலைப் படிப்பிற்கான 2019-21ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

வழங்கப்படும் படிப்புகள் :

Post Graduate Diploma in Industrial Management (PGDIM) & Post Graduate Diploma in Industrial Safety and Environmental Management(PGDISEM) போன்ற இரண்டு வருட கால அளவிலான முதுகலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

கல்வித் தகுதி :

எஞ்சினியரிங்/ டெக்னாலஜி துறைகளில் ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்களாவர். பொதுப்பிரிவு மாணவர்கள் 60%,
எஸ்.சி./எஸ்.டி. மாணவர்கள் 55% மதிப்பெண் மற்றும் CAT - 2018 நுழைவுத்தேர்வில் நல்ல மதிப்பெண்ணுடனும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். மேலும் இறுதி ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

மாணவர் சேர்க்கைமுறை :

மாணவர்கள் CAT - 2018 நுழைவுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகத்தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.nitie.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு படிப்புகளுக்கும் பொதுப்பிரிவு மாணவர்கள் ரூ.1000, எஸ்.சி./எஸ்.டி. மாணவர்கள் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கவேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 1.2.2019. தொழில் மேலாண்மை விண்ணப்பித்தவர்களுக்கு 2019 மார்ச் 25 -29 தேதி வரை நடத்தப்படும் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

மேலதிக விவரங்களுக்கு www.nitie.ac.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

- துருவா

X