NII-ல் இம்யூனாலஜி பிஎச்.டி. மாணவர் சேர்க்கை!

1/24/2019 2:54:56 PM

NII-ல் இம்யூனாலஜி பிஎச்.டி. மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி

மத்திய அரசின் உயிரியல் தொழில்நுட்பத்துறையின் சார்பாக நோய் எதிர்ப்பு சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இம்யூனாலஜி’ (என்.ஐ.ஐ.) புதுடெல்லியில் இயங்கிவருகிறது. இது ஒரு தன்னாட்சிக்கல்வி நிறுவனமாகும். இந்நிறுவனம் பிஎச்.டி. மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாடப் பிரிவுகள்: பிஎச்.டி. (இம்யூனாலஜி, இன்ஃபக்‌ஷியஸ் அண்ட் குரோனிக் பயாலஜி, மாலிகுலார் அண்ட் செல்லுலார் பயாலஜி, கெமிக்கல் பயாலஜி, ஸ்ட்ரக்ச்சுரல் பயாலஜி மற்றும் காம்புடேஷனல் பயாலஜி)

தகுதிகள்: உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் போன்ற அறிவியல்துறை சார்ந்த பிரிவில் எம்.எஸ்சி./எம்.டெக்.  எம்.பி.பி.எஸ்., எம்.வி.எஸ்சி., எம்.பார்ம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் முதுநிலை பட்டத்தை 60% மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிப்பெண்களில் 5% விலக்கு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.nii.res.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் 27.1.2019.

X