தேசிய திறன் வளர்ப்பு பயிற்சி மையத்தில் சேரலாம்!

7/18/2019 2:50:22 PM

தேசிய திறன் வளர்ப்பு பயிற்சி மையத்தில் சேரலாம்!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

அட்மிஷன்

இந்திய மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு சார்ந்த திறனை மேம்படுத்தவும், சிறந்த தரத்தில் தொழில்முறைப் பயிற்சிகளை வழங்கும் நோக்கிலும்  உருவாக்கப்பட்டது தேசிய திறன் வளர்ப்புப் பயிற்சி நிறுவனம் (National Skill Training Institute-NSTI). மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இக்கல்விநிறுவனம் இயங்கிவருகிறது.

இக்கல்வி நிறுவனத்துக்கு மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, திருச்சி போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயிற்சி மையங்கள் உள்ளன. திருச்சியில் பெண்களுக்காக இயங்கிவரும் கல்விநிறுவனத்தில் 2019ம் கல்வி ஆண்டுக்கான பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

வழங்கப்படும் படிப்புகள்

ஒரு வருட கால அளவிலான Fashion Design Technology மற்றும் Internet of Things (IOT) Technician (Smart city), ஆறு மாத கால அளவிலான Smart Phone Technician (Cum App Tester), ஒரு வருடகால அளவிலான Secretarial Practice (English) மற்றும் இரண்டு வருட கால அளவிலான Electronics Mechanic போன்ற படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

கல்வித் தகுதி

மேற்கூறிய அனைத்து படிப்புகளுக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அடிப்படைக் கல்வித் தகுதியாக கருதப்படுகிறது. மேலும் +2, டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர்.  

தேர்ந்தெடுக்கப்படும் முறை

மாணவர்கள் தங்கள் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
 
விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.nstitrichy.ac.in என்ற இணையதளம் சென்று விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்யவேண்டும். முழுமையாக பூர்த்தி செய்த படிவத்தை ‘National Skill Training Institute (W), CoE building, Govt, ITI Campus, Trichy -620014, Tamil Nadu‘ என்ற முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 20.7.2019. மேலும் விரிவான தகவல்களுக்கு www.nstitrichy.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

-துருவா

X