MBA, MCA முதுநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை!

8/7/2019 4:34:49 PM

MBA, MCA முதுநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அரசு / அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகள் / அண்ணா பல்கலைக்கழகம் / துறைகள் / வட்டார மையங்கள் / சென்னைப் பல்கலைக்கழகம் / இதர பல்கலைக்கழகங்கள் மேலும் சுயநிதிப் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் 2019 -20ம் கல்வி ஆண்டிற்கான எம்.பி.ஏ., எம்.சி.ஏ. முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

வழங்கப்படும் படிப்புகள்

இரண்டு வருட கால அளவுகொண்ட முதுகலைப் படிப்புகளான MBA, MCA மற்றும் MCA (Lateral Entry) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

கல்வித் தகுதி

அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் படித்து 50% மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். எஸ்.சி /எஸ்.டி மாணவர்களுக்கு மதிப்பெண்களில் 5% தளர்வு அனுசரிக்கப்படுகிறது.
 
நுழைவுத் தேர்வு

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தமிழக அரசால் நடத்தப்படும் டான்செட்-2019 நுழைவுத் தேர்வுகளில் கலந்துகொண்டு மதிப்பெண் சான்றிதழுடன் விண்ணப்பித்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை

டான்செட் நுழைவுத் தேர்வு மற்றும் இளங்கலையில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.gct.ac.in / www.tn-mbamca.com என்ற இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பித்த பின் விண்ணப்பப் படிவத்தைப் பிரதி எடுத்து அதனுடன் பதிவுக் கட்டணமாக ரூ.300ஐ “ The Secretary, TN MBA / MCA Admissions-2019, GCT” Payable at Coimbatore என்ற பெயரில் வரைவோலையாகப் பெற்று ‘ செயலர், தமிழ்நாடு எம்.பி.ஏ. / எம்.சி.ஏ., மாணவர் சேர்க்கை-2019, அரசினர் பொறியியல் கல்லூரி கோயம்புத்தூர் -13’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.150 ஐ செலுத்தினால் போதுமானாது. விண்ணப்பிக்க கடைசி நாள் 3.8.2019. மேலதிக தகவல்களுக்கு www.gct.ac.in / www.tn-mbamca.com என்ற இணையதளப் பக்கங்களைப் பார்க்கலாம்.

 - துருவா

X