மின்னணு தொழில்நுட்பப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை!

8/19/2019 3:15:47 PM

மின்னணு தொழில்நுட்பப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

*அட்மிஷன்

தகவல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் துறைகளில் சர்வதேச அளவிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், அத்துறைகளில் தொழில்முறைப் பயிற்சி பெற்றவர்களை அதிகரித்து மனிதவளத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதுதான் National Institute of Electronics & Information Technology (NIELIT). இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்பட்டுவரும் இந்நிறுவனம் நாடெங்கிலும் உள்ள சுமார் 700 கல்விநிறுவனங்களுடன் இணைந்து எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் மற்றும் இன்ஃபர்மேஷன் சார்ந்த பல்வேறு பயிற்சிகளை வழங்கிவருகிறது.

இந்நிறுவனம் பல்வேறு சான்றிதழ், முதுகலைப்பட்டயப்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கிவருகிறது. கேரளாவின் கோழிக்கோட்டில் இயங்கிவரும் (NIELIT, Calicut) கல்வி நிறுவனத்தில் 2019-2020 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

வழங்கப்படும் படிப்புகள்

ஆறு மாத கால அளவிலான PG Diploma in Embedded System Design, PG Diploma in Industrial Automation System Design, PG Diploma in Cloud Computing, மூன்று முதல் நான்கு மாதக் குறுகிய காலப் படிப்புகளான Advanced Diploma in Big Data Analytics, Advanced Diploma in Artificial Intelligence, Advanced Diploma in Information System Security Level 1 போன்ற படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது.

கல்வித் தகுதி

வெவ்வேறு படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால் படிப்புகளுக்கு ஏற்றவாறு கல்வித்தகுதி மாறுபடுகிறது. முதுகலை டிப்ளோமா படிப்புகளான Embedded System Design, Industrial Automation System Design மற்றும் Cloud Computing ஆகிய படிப்புகளுக்கு Electronics / Electronics & Communication/ Electrical and Electronics / Instrumentation / IT / Computer Science போன்ற துறைகளில் B.E / B.Tech அல்லது M.E / M.Tech முடித்திருக்க வேண்டும். Advanced Diploma in Big Data Analytics, Advanced Diploma in Artificial Intelligence, Advanced Diploma in Information System Security Level 1 ஆகிய படிப்புகளுக்கு மேற்சொன்ன கல்வித் தகுதி அல்லது Electronics & Communication / IT / Computer Science போன்ற துறைகளில் மூன்று வருட டிப்ளோமா முடித்திருக்க வேண்டும். இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் தங்கள் இளங்கலை, முதுகலைப் படிப்புகளில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://nielit.gov.in/content/online-registration என்ற இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுக் கட்டணமாகப் பொதுப்பிரிவினர் ரூ.1000, எஸ்.சி / எஸ்.டி மாணவர்கள் ரூ.500 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பல்வேறு படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால் ஒவ்வொரு படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கும் தேதிகள் மாறுபடுகின்றன.

Embedded System Design 19.8.2019, Industrial Automation System Design 7.9.2019, Cloud Computing 2.9.2019, Big Data Analytics 4.9.2019, Artificial Intelligence30.9.2019 மற்றும் Information System Security Level 1 2.9.2019.

- துருவா

X