கொல்கத்தா கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி. மாணவர் சேர்க்கை!

9/3/2019 2:52:42 PM

கொல்கத்தா கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி. மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இன்ஸ்டிடியுட் ஆஃப் டெவலெப்மெண்ட் ஸ்டடீஸ் கொல்கத்தா (ஐ.டி.எஸ்.கே.) கல்விநிறுவனத்தில் பிஎச்.டி. படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதிகள்: உரிய முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி.,/எஸ்.டி., / ஓ.பி.சி, பிரிவினர் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

நெட்/ ஸ்லெட் / செட் / கேட் அல்லது எம்.பில்.,/எம்.டெக்.,/எம்.டி.,/எம்.இ.,/எம்.பார்ம் தேர்ச்சி பெற்றவரகள் நுழைவுத்தேர்வு எழத வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நேரடியாக இண்டர்வியூவில் பங்கேற்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 9.9.2019. நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் 21.9.2019. மேலும் விவரங்களுக்கு http://idsk.edu.in/phd-programme என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.

X