கால்நடைப் பல்கலையில் முதுநிலைப் பட்டம் படிக்க விண்ணப்பிக்கலாம்!

9/17/2019 4:02:48 PM

கால்நடைப் பல்கலையில் முதுநிலைப் பட்டம் படிக்க விண்ணப்பிக்கலாம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒ0ன்றாகும். 1989 -ல் இது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து பிரிந்து தனிப் பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டது. சென்னை மாதவரத்தில் அமைந்துள்ளது. சென்னை கால்நடைக் கல்லூரி, நாமக்கல் கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி ஆகியவை இதன்கீழ் செயல்படுகின்றன.

*கால்நடை மருத்துவம், விலங்கினம், கோழியினம், பால் மற்றும் உணவு அறிவியலில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கான தரமான கல்வியை அளித்தல்.
*கால்நடை மற்றும் கோழிகளின் நலப் பாதுகாப்பு மற்றும் அவற்றிலிருந்து பெறப்படும் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் பற்றிய அடிப்படை மற்றும் உயர்மட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்.
*கால்நடை மற்றும் கோழியின வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் உரிய தொழில்நுட்பத் தகவல்களை கால்நடை பராமரிப்புத் துறையைச் சார்ந்தவர்களுக்கும், பண்ணையாளர்களுக்கும் விரிவாக்கக் கல்வி மூலம் பரப்புதல் என பல நோக்கங்களை குறிக்கோளாக கொண்டு இப்பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது.
தற்போது இப்பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பல்வேறு முதுநிலை
பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


முதுநிலைப் பட்டப்படிப்புகள்


*எம்.விஎஸ்சி.
*எம்.எஸ்சி. இன் பயோடெக்னாலஜி
*எம்.டெக்.- ஃபுட் டெக்னாலஜி
*எம்.டெக்.- டயரி டெக்னாலஜி அண்ட் டயரி கெமிஸ்ட்ரி
*எம்.டெக். - பௌல்ட்ரி டெக்னாலஜி
*பிஎச்.டி. இன் வெட்டரினரி அண்ட்
அனிமல் சயின்ஸ்
*பிஎச்.டி., இன் ஃபுட் டெக்னாலஜி
*பிஎச்.டி., இன் பயோடெக்னாலஜி

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்

*வெட்டரினரி லேபாரட்டரி அண்ட் டயக்னாசிஸ்
*கம்பேனியன் அனிமல் பிராக்டிஸ்
*டயரி புராசசிங் அண்ட் குவாலிட்டி சிஸ்டம்
*ஃபுட் டாக்சிகாலஜி அண்ட் சேஃப்டி மேனேஜ்மென்ட்
*ஸ்மால் அனிமல் எமெர்ஜென்சி அண்ட் கிரிட்டிக்கல் கேர் மெடிசின்
*ஸ்மால் அனிமல் டெர்மட்டாலஜி

கல்வித் தகுதிகள் மற்றும் தேர்வு செய்யப்படும் முறை: ஒவ்வொரு முதுநிலைப் படிப்புகளுக்கு ஏற்ப கல்வித் தகுதிகள் மாறுபடும். எனினும், பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு மதிப்பெண், இளநிலைப் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ www.tanuvas.ac.in இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 18.9.2019.

நுழைவுத் தேர்வு நாள்: 10.10.2019 அன்று நடைபெறும். இத்தேர்வின் முடிவு 11.10.2019 அன்று வெளியிடப்படும்.

மேலும் முழுமையான விவரங்களுக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.

X