பாண்டிச்சேரி பல்கலையில் MBA மாணவர் சேர்க்கை!

9/19/2019 12:13:55 PM

பாண்டிச்சேரி பல்கலையில் MBA மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் எம்.பி.ஏ. படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வழங்கப்படும் படிப்புகள்: எம்.பி.ஏ., வித் டியூவல் ஸ்பெஷலைசேஷன் - ஃபினான்ஸ், இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ், ஹூயூமன் ரிசோசர்ஸ் மேனேஜ்மெண்ட், மார்க்கெட்டிங் அண்ட் ஆப்ரேஷன்ஸ் மேனேஜ்மெண்ட். எம்.பி.ஏ., - டேட்டா அனலிட்டிக்ஸ்.

தேவையான தகுதிகள்: நவம்பரில் நடைபெற உள்ள காமன் அட்மிஷன் டெஸ்ட் -2020 தேர்வை எழுத வேண்டும். அந்த மதிப்பெண்களுடன், குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: கேட் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட பிறகு, அந்த மதிப்பெண்களைக் கொண்டு ஜனவரி 2020ல் பாண்டிச்சேரி பல்கலைக்கழக இணையதளத்தில், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் முழு விவரங்களுக்கு www.pondiuni.edu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

X