IIFTல் MBA மாணவர் சேர்க்கை!

10/23/2019 11:57:46 AM

IIFTல் MBA மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

எம்.பி.ஏ., இன்டர்நேஷனல் பிசினஸ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் டிரேட்  ஐ.ஐ.எப்.டி., கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இக்கல்வி நிறுவனத்துக்கு புதுடில்லி, கொல்கத்தா மற்றும் காக்கிநாடா ஆகிய பகுதிகளில் வளாகங்கள் செயல்படுகின்றன.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 3 ஆண்டுகள் இளநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி./எஸ்.டி./மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.
தேர்வு செய்யப்படும் முறை: கம்ப்யூட்டர் வாயிலாக நடத்தப்படும் நுழைத்தேர்வு மூலம் இப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. கல்வி நிறுவனத்தின் சார்பாக, நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (என்.டி.ஏ.,) நுழைவுத் தேர்வை நடத்துகிறது.

நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் 1.11.2019.
விண்ணப்பிக்க கடைசி நாள் 25.10.2019.
மேலும் விவரங்களுக்கு www.iift.edu மற்றும் www.nta.ac.in ஆகிய இணையதளங்களைப் பார்க்கவும்.

X