முதுநிலை மருத்துவப் பட்டம் படிக்க நீட்-பி.ஜி. 2020

11/19/2019 11:57:31 AM

முதுநிலை மருத்துவப் பட்டம் படிக்க நீட்-பி.ஜி. 2020

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

இந்தியாவில் மருத்துவ முதுநிலைப் படிப்புகளில் சேர்க்கை பெற அவசியம் எழுதவேண்டிய ‘நேஷனல் எலிஜிபிலிட்டி கம் எண்ட்ரன்ஸ் டெஸ்ட் - பி.ஜி.,2020 தேர்வை நேஷனல் போர்டு ஆஃப் எக்‌சாமினேஷன்ஸ் அறிவித்துள்ளது.

படிப்புகள்: எம்.டி., எம்.எஸ். முதுநிலை டிப்ளமோ படிப்புகள்

கல்வித் தகுதிகள்: எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர்கள் அல்லது இந்திய மெடிக்கல் கவுன்சில் விதிமுறையின்படி, எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு நிகரான பட்டம் பெற்றவர்கள் மற்றும் ஓர் ஆண்டு இன்டர்ன்ஷிப் நிறைவு செய்தவர்கள்.

தேர்வு முறை: சி.பி.டி. எனப்படும் கம்ப்யூட்டர் வாயிலாக தேர்வு நடைபெறும். ஒரே நேரத்தில் நாடு முழுவதும் இத்தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பிக்க முடியும். முதல் வருபவர்களுக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 21.11.2019. இந்த நுழைவுத்தேர்வு ஜனவரி 5, 2020 அன்று நடைபெறவுள்ளது. தேர்வு முடிவுகள் ஜனவரி 31, 2020 அன்று வெளியிடப்படும்.

மேலும் முழு விவரங்களுக்கு www.nbe.edu.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.

X