மருத்துவ ஆய்வு கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை!

12/3/2019 2:16:35 PM

மருத்துவ ஆய்வு கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் விராலஜி கல்வி நிறுவனம் புனேவிலுள்ள இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்-ன் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டுவருகிறது. இக்கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி. படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

கல்வித்தகுதிகள்: லைஃப் சயின்சஸ், பயாலஜிக்கல் சயின்சஸ், பயோடெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, பயோ-இன்ஃபர்மேட்டிக்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்புடன் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். நெட், ஸ்லெட், கேட், டி.பி.டி.,-இன்ஸ்பயர் போன்றவற்றில் ஏதேனும் ஒரு தேர்வில் உரிய மதிப்பெண் பெற்றிருப்பதும் அவசியம். நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 12.12.2019.

மேலும் விவரங்களுக்கு: http://niv.co.in

X