ஃபேஷன் டெக்னாலஜி பட்டம் படிக்க NIFT-2020 நுழைவுத் தேர்வு!

12/12/2019 4:57:31 PM

ஃபேஷன் டெக்னாலஜி பட்டம் படிக்க NIFT-2020 நுழைவுத் தேர்வு!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

நுழைவுத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது!

ஆடை அலங்கார வடிவமைப்புத் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பக் கல்வியை வழங்கிவருகிறது தேசிய வடிவமைப்புத் தொழில்நுட்ப (National Institute of Fashion Technology) கல்வி நிறுவனம். ஆடை அலங்காரம் தொடர்பான இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டங்களில் 10 விதமான படிப்புகள் வழங்கப்படுகின்றன.

பெங்களூரு, போபால், காந்திநகர், ஹைதராபாத், புவனேஷ்வர், சென்னை, ஜோத்ப்பூர், காஸ்ரா, கண்ணூர், கொல்கத்தா, பாட்னா, ரேபரேலி, மும்பை, புதுடெல்லி, ஷில்லாங், ஸ்ரீநகர் ஆகிய 16 இடங்களில் வளாகங்கள் உள்ளன.இக்கல்வி நிறுவனம் மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கிவருகிறது. ஆடை, அணிகலன்கள், தோல் பொருள்கள், செய்தித்தொடர்பு, வடிவமைப்புத் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் இன்றைய தேவைக்கேற்ப, தற்கால, முற்கால தொழில்நுட்பங்களைத் தேவைக்கேற்ப ஒருங்கிணைத்து இதற்கேற்ற கல்வியைத் தருகிறது.

வடிவமைப்புப் படிப்புகள்

இளநிலை வடிவமைப்பு (Bachelor of Design) - 4 ஆண்டுகள்

AD -    அக்சசரி டிசைன் (Accessary Design)
FC - ஃபேஷன் கம்யூனிகேஷன் (Fashion Communication)
FO -    ஃபேஷன் டிசைன் (Fashion Design)
KD -    நிட்வேர் டிசைன் (Knitwear Design)
LD - லெதர் டிசைன் (Leather Design)
TD - டெக்ஸ்டைல் டிசைன் (Textile Design)
இளநிலை வடிவமைப்புத் தொழில்நுட்பம் (Bachelor of Fashion Technology) - 4 ஆண்டுகள்
F.Tech - ஃபேஷன் டெக்னாலஜி அப்பேரல் புரொடெக்‌ஷன்
(Fashion Technology -Apperal Production)

முதுநிலைப் படிப்புகள்

(Post Graduats) - 2 ஆண்டுகள்
M.DES - மாஸ்டர் ஆஃப் டிசைன் (Master of Design)
M.F.M - மாஸ்டர் ஆஃப் ஃபேஷன் மேனேஜ்மென்ட் (Master of Fashion Management)
MF.Tech - மாஸ்டர் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி  (Master of  Fashion Technology)

நுழைவுத்தேர்வு

மேலே கொடுக்கப்பட்டுள்ள படிப்புகளுக்கு அகில இந்திய  நுழைவுத் தேர்வு மூலமே மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதில் படிப்புகளுக்கு ஏற்ப தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.B.Des படிப்பிற்கு எழுதவேண்டிய தேர்வுகள் Creative Ability Test (CAT), General Ability Test (GAT). இவை அடங்கிய எழுத்துத் தேர்வு. இத்தேர்வின் தேர்ச்சிக்குப் பின் Situation Test எழுத வேண்டும்.

B.F.Tech படிப்பிற்கு எழுதவேண்டிய தேர்வுகள்

General Ability Test (GAT)M.Des படிப்பிற்கு எழுதவேண்டிய தேர்வுகள் Creative Ability Test (CAT), General Ability Test (GAT) என்ற பிரிவுகளில் உள்ள எழுத்துத் தேர்வின் தேர்ச்சிக்குப் பின், கலந்துரையாடல் (Group Discussion) நேர்முகத்தேர்வு (Personal Interview) இவற்றை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். இத்தேர்வுகளைத்தான் M.F.M, M.F.Tech விண்ணப்பதாரர்களும் எழுதவேண்டும்.எழுத்துத் தேர்வு மாணவர்களின் அறிவுத்திறன், நுண்ணறிவு, பொதுத்திறன் ஆகியவற்றையும் சோதிப்பதாக அமையும்.

மதிப்பெண்கள்

B.DES: CAT: 50% GAT: 30% ST: 20%
M.DES: CAT: 40% GAT: 30% GD/AI: 30%
BFT: GAT : 100%
MFT: CAT : 70% GD/PI: 30%
MFM: GAT : 70% GD/PI: 30%
பாடத்திட்டம்

General Ability Test (GAT)

(120 மணித்துளிகள்)
                                                    B.Des    M.Des
குவாண்டிட் டேட்டிவ் எபிலிட்டி    20    20
கம்யூனிகேஷன் எபிலிட்டி         25    30
ஆங்கிலம்                       25    30
அனாலிட்டிக்கல் எபிலிட்டி        15    25
பொது அறிவு, தற்கால  நிகழ்வுகள் 15    15

என்றபடி வினாக்கள் கேட்கப்படும்.

Creative Ability Test (CAT)

இளநிலை, முதுநிலை என்ற இரு படிப்புகளுக்கும் மாணவர்களின் திறன், உற்று நோக்கித் திறன் அறியும் கோட்பாடு உருவாக்கம், வடிவமைப்புத் திறன், ஆக்கப்பூர்வ, புதிய திறன்மிகு நிறப்பயன்பாடு, காட்சித்திறன் இத்தலைப்புகளில் சோதிக்கப்படும்.
B.F.Tech, M.F.Tech, MFM என்ற படிப்புகளுக்கு 180 மணித்துளிகள் நடைபெறும் General Ability Test-ல்

           M.F.Tech    B.F.Tech    MFM
குவாண்டிட்
டேட்டிவ்
எபிலிட்டி    30    30    25

கம்யூனி
கேஷன்
எபிலிட்டி

இங்கிலீஷ்
காம்ப்ரி
ஹென்சன்    45    45    50

அனாலிட் டிக்கல்/
லாஜிக்கல்
எபிலிட்டி        25    25    25

பொது  அறிவு,
தற்கால நிகழ்வு  25    25    25

கேஸ் ஸ்டடி    25    25    25

-என்றவாறு 150 வினாக்கள் கேட்கப்படும்.

பொதுவாக குவாண்டிட்டேட்டிவ் எபிலிட்டி என்ற பிரிவுகளில் கூட்டல், பெருக்கல், வகுத்தல், கழித்தல், பின்னங்கள், விழுக்காடு, வட்டிவீதம், வேலை, திறன், விகிதம் நேரம், தூரம் இவற்றில் கணக்குகள் கேட்கப்படும்.ஆங்கிலச் செய்தித் தொடர்கள் நேர்பதம், எதிர்பதம், சொற்கள் இவற்றின் பொருள்கள், ஒருமை, பன்மை, ஒரு சொல் பிரதியீடு, இடியம், பிரேசஸ், ஸ்பெல்லிங், காம்ப்ரிஹென்ஷன் ஆகியவை இடம்பெறும்.

அனாலிட்டிக்கல்&லாஜிக்கல் எபிலிட்டி பிரிவில் கணக்குகளைப் புரிந்து தீர்வு செய்தல், காரணம் மற்றும் விளைவுகள், கோட்பாடுகள், இணைச் சிந்தனைகள் இவை இடம்பெறும்.பொது அறிவு, தற்கால நிகழ்வுகள் பிரிவுகளில் இவை சார்ந்து மாணவர்களின் அறிவுத்திறன் சோதிக்கப்படும்.
கேஸ் ஸ்டடியில் தொழிலகச் சூழலில் மாணவர்களின் மேலாண்மை தொடர்பான அறிவுத்திறன் சோதிக்கப்படும்.

இளநிலை B.Des படிப்பிற்கான சிச்சுவேஷன் டெஸ்ட்டில் (Situation Test),  கொடுக்கப்பட்ட பொருள்களைக் கொண்டு மாணவர்களின் வடிவமைப்பு மேம்பாட்டுத்திறன் சோதிக்கப்படும். கலந்துரையாடல் 15 அல்லது 20 மணித்துளிகள் நடைபெறும். கோட்பாடுகளைப் புரிந்துகொள்ளுதல், தலைப்புச்சார் அறிவு, தொடர்புத் திறன், புதுக் கருத்துகளை, கோட்பாடுகளை உருவாக்கல், கணக்குகளைத் தீர்த்தல், தலைமைப்பண்புகள், திறன்பட்ட செய்தித் தொடர்பு இவை சோதிக்கப்படும்.

நேர்முகத்தேர்வில் கேரியர் ஓரியண் டேஷன், படிப்பிற்கேற்ற நடைமுறைகள், சாதனைகள், தனித்திறன்கள், இதர திறன்கள், செய்தித்தொடர்புத் திறன், பொதுஅறிவு, நுண்ணறிவு, ஆக்கப்பூர்வச் சிந்தனை, இணை சிந்தனைகள் இவை சோதிக்கப்படும்.B.Des, BF.Tech படிப்பிற்கு SAT ஸ்கோரும், MFM படிப்பிற்கு GMAT ஸ்கோரும், M.Des, MF.Tech படிப்பிற்கு GRT ஸ்கோரும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இம்மதிப்பெண்கள் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் எடுத்துக்கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கத் தகுதி

B.Des, BF.Tech இந்த இளநிலைப் படிப்புகளுக்கு உச்ச வயதுவரம்பு 1.10.2019 வரை 23-க்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிட, பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்கு 5 ஆண்டுகள் வயதுத் தளர்வு உண்டு.B.Des படிப்பிற்கு அரசு அங்கீகாரம் உள்ள பள்ளிகளில் ஏதேனும் ஒரு பாடத்தில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BF.Tech படிப்பிற்கு +2-ல் இயற்பியல், கணிதம், வேதியியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.டிப்ளமோ படித்தவர்கள் வரும் கல்வி ஆண்டில் இறுதித் தேர்வு எழுத இருப்போரும் விண்ணப்பிக்கலாம். முதுநிலைப் படிப்பிற்கு விண்ணப்பிக்க உச்ச வயது வரம்பு இல்லை.

மாஸ்டர் ஆஃப் டிசைன் படிப்பிற்கு ஏதேனும் ஓரிரு துறையில் இளநிலைப் படிப்போ, நிஃப்ட்/ என்.ஐ.டி. வழியாக மூன்றாண்டு இளநிலை, டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும். மாஸ்டர் ஆஃப் ஃபேஷன் மேனேஜ்மென்ட் படிப்பிற்கு இதே படிப்பில் இளநிலை முடித்திருக்க வேண்டும். மாஸ்டர் ஆஃப் பேஷன் டெக்னாலஜி படிப்பிற்கு நீஃப்ட் வழியாக பி.எப்.பி.டெக் படிப்போ பி.இ/பி.டெக் படிப்போ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nift.ac.com அல்லது https//admission.net/nift என்ற இணையம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

பொதுப் பிரிவினர், பிற்படுத்தப் பட்டவர்கள் ரூ.2000, எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் ரூ.1000 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 31.12.2019.மேலும் முழு விவரங்களுக்கு www.nift.ac.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

X