பெங்களூரு ஐ.ஐ.எம்-ல் ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை!

1/9/2020 4:19:20 PM

பெங்களூரு ஐ.ஐ.எம்-ல் ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி
 
ஐ.ஐ.எம். என்று சுருக்கமாகச் சொல்லப்படும் பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட், உதவித்தொகையுடன்கூடிய பிஎச்.டி., (ஆராய்ச்சி) படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆராய்ச்சிப் பிரிவுகள்: டிசிசன் சயின்சஸ், எக்கனாமிக்ஸ் அண்ட் சோஷியல் சயின்சஸ், ஆன்ட்ரபிரனர்ஷிப், ஃபினான்ஸ் அண்ட் அக்கவுன்டிங், இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ், மார்க்கெட்டிங், ஆர்கனிசேஷனல் பிகேவியர் அண்ட் ஹுயூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், புரொடக்‌ஷன் அண்ட் ஆப்பரேஷன்ஸ் மேனேஜ்மென்ட், பப்ளிக் பாலிசி மற்றும் ஸ்ட்ரேடஜி.

ஆராய்ச்சிக் காலம்: அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்குள் படிப்பை நிறைவு செய்ய வேண்டும்.

தேவையான தகுதிகள்: முதுநிலைப் பட்டப்படிப்பு அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்பு  அல்லது 4 ஆண்டுகள் இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., சி.எஸ். போன்ற தொழில்முறை படிப்பில் குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஜிமேட், ஜி.ஆர்.இ., சி.ஏ.டி., ஜி.ஏ.டி.இ., ஐ.ஐ.எம்.பி., நெட்(ஜே.ஆர்.எஃப்.,) போன்ற ஏதேனும் ஒரு நுழைவுத்தேர்வு எழுதியிருப்பதும் அவசியம்.

உதவித்தொகை: தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.35 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படும். இவைதவிர, ஆண்டு உதவித்தொகை, தங்குமிட செலவினம், மாநாடுகளில் பங்குபெறுவதற்கான செலவினம் ஆகியவையும்  கல்வி நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.1.2020.மேலும் விவரங்களுக்கு www.iimb.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

X