புதுடெல்லி NII-ல் Ph.D. மாணவர் சேர்க்கை!

1/20/2020 4:50:47 PM

புதுடெல்லி  NII-ல் Ph.D.  மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இம்யூனாலஜி’புதுடில்லியில் உள்ளது. இது ஒரு தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனமாகும். இக்கல்வி நிறுவனம் பிஎச்.டி. படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஆராய்ச்சிப் பிரிவுகள்: இம்யூனாலஜி, இன்ஃபெக்சியஸ் அண்ட் க்ரானிக் டிசீஸ் பயாலஜி, மாலிகுளர் அண்ட் செலுலார் பயாலஜி, கெமிக்கல், ஸ்ட்ரக்சுரல் அண்ட் கம்ப்யூடேஷனல் பயாலஜி.

தேவையான தகுதிகள்: எம்.எஸ்சி., (பயாலஜி, கெமிஸ்ட்ரி, மேத்மெடிக்ஸ், பிசிக்ஸ்), எம்.பி.பி.எஸ்.,  எம்.வி.எஸ்சி.,  எம்.பார்ம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்பில் அல்லது அதற்கு இணையான படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 12ம் வகுப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களில் 5 சதவீத தளர்வு உண்டு.

மாணவர் சேர்க்கை முறை: என்.ஐ.ஐ., நடத்தும் பிரத்யேக ஆன்லைன் நுழைவுத்தேர்வு (நுழைவுத்தேர்வு நடத்தப்படும் நாள் 23.2.2020) அல்லது ஜாயின்ட் கிராஜுவேட் என்ட்ரன்ஸ் எக்சாமினேஷன் அண்ட் இன்டர்டிசிப்ளினரி சயின்சஸ் - ஜே.ஜி.இ.இ.பி.ஐ.எல்.எஸ்.,  மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்களுக்குச் சேர்க்கை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள் 31.1.2020.

மேலும் விவரங்களுக்கு www.nii.res.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

X