பெங்களூரு IIPM-ல் முதுநிலைப் பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கை!

1/20/2020 4:53:57 PM

 பெங்களூரு IIPM-ல் முதுநிலைப் பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளான்டேஷன் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம் பெங்களூருவில் செயல்பட்டுவருகிறது. இக்கல்வி நிறுவனம் அமெரிக்காவின் விஸ்கான்ஷின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து முதுநிலை டிப்ளமோ படிப்பை வழங்குகிறது.

வழங்கும் படிப்பு:

இரண்டு ஆண்டு காலம் கொண்ட போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட்-ஃபுட் ப்ராசசிங் அண்டு பிசினஸ் மேனேஜ்மென்ட் (பி.ஜி.டி.எம்.-எஃப்.பி.பி.எம்.,) படிப்பு.

கல்வித் தகுதி:

ஃபுட் டெக்னாலஜி, ஃபுட் சயின்ஸ், நியூட்ரிஷன், பிஷ்ஷரிஸ், டெய்ரி, அனிமல் ஹஸ்பெண்டரி, ஹார்ட்டிகல்சர் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். எஸ்.சி.,/எஸ்.டி.,/மாற்றுத்திறனாளிகள் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. மேலும், கேட், மேட், சி-மேட், ஏ.டி.எம்.ஏ., ஜி.ஏ.டி.இ. ஆகிய நுழைவுத்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை எழுதியிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 31.1.2020. மேலும் விவரங்களுக்கு http://iipmb.edu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

X