எஃகுக் கட்டடங்கள் வடிவமைப்புப் போட்டி..!

1/6/2017 12:44:40 PM

எஃகுக் கட்டடங்கள் வடிவமைப்புப் போட்டி..!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பன்னாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

குளீரூட்டப்பட்ட எஃகுப் பொறியாளர்கள் நிறுவனம் (Cold-Formed Steel Engineers Institute) அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரில் அமைந்திருக்கிறது. இது 2016-2017 ஆம் ஆண்டுக்குரிய பன்னாட்டு மாணவர்களுக்கான குளிரூட்டப்பட்ட எஃகுக் கட்டட வடிவமைப்புப் போட்டியினை (2016-2017 International Cold-Formed Steel Building Student Design Competition) அறிவித்திருக்கிறது.

ஆதரவளிப்பாளர்கள்2011ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக நடத்தப்பட்டுவரும் இந்தப் போட்டி 2016 - 2017ஆம் ஆண்டு போட்டிக்குத் தேசிய அறிவியல் அறக்கட்டளை (National Science Foundation), அமெரிக்க இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (American Iron and Steel Institute), அமெரிக்க கட்டடப் பொறியாளர்களின் குளிரூட்டப்பட்ட எஃகுப் பணிகளுக்கான குழு உறுப்பினர்கள்  குழு (American Society of Civil Engineers,  Committee of Cold-Formed Members) மற்றும் வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகம் (University of North Texas) ஆகியவை ஆதரவாளர்களாக இருக்கின்றன.

யார் பங்கேற்கலாம்?

உலக நாடுகளிலுள்ள கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது முதுநிலைப் பட்டப்படிப்பு படிப்பவர்கள் தனியாகவோ அல்லது ஒரு குழுவாகவோ இப்போட்டியில் கலந்துகொள்ள முடியும். வடிவமைப்பு சமர்ப்பித்தல் இப்போட்டிக்கான வடிவமைப்புகள் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றிச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.வடிவமைப்புச் செயலுக்கான சுருக்கத்தை (Executive Design Summary)  பங்கேற்பாளர் பெயர், படிக்கும் கல்வி நிறுவனம் போன்ற தகவல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

கட்டட வடிவமைப்புக்கான முப்பரிமாண (3D) வடிவத்தினை, கட்டமைப்பு முறை (Structural System), கட்டட முகப்புடன் கூடிய பணி முடிக்கப்பட்ட கட்டடம் (Finished building including facade) போன்றவைகளை ttp://www.autodesk.com/education/free-software/revit எனும் இணையதளத்தில் கிடைக்கும் இலவச மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கியிருக்க வேண்டும்.

பத்துப் பக்கங்களுக்கு அதிகமாகக் கட்டமைப்பு வடிவமைப்பு கணக்கீடுகள் (வடிவமைப்பு மென்பொருள் பயன்படுத்துதல் ஊக்குவிக்கப்படுகிறது) மற்றும் கட்டமைப்பு முறை மற்றும் கட்டட முகப்பு ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்பட்ட கட்டடப் பொருட்களின் கன அளவு மற்றும் எடை குறித்த அட்டவணைச் சுருக்கம் போன்றவையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். போட்டிக்கான வடிவமைப்புகளை info@cfsei.org எனும் மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 3.3.2017.

வழிகாட்டுநர் இப்போட்டியில் கலந்துகொள்ளும் குழு/நபருக்கு வடிவமைப்பின் வழிகாட்டுதலுக்கு இத்துறையில் அனுபவமுடைய வழிகாட்டுநர் உதவி ஏதாவது தேவையெனில் மேற்காணும் மின்னஞ்சலில் தொடர்புகொண்டு பெறலாம்.  பரிசுத் தேர்வு இப்போட்டிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட வடிவமைப்புகளிலிருந்து, வடிவமைப்பு (Design) எனும் அடிப்படையில் திறநிறைவு (Resourcefulness), திட்டக்கட்டுமானத் திறன் (constructability), படைப்புத்திறன் (creativity) போன்றவைகளும், அமைப்பு (Structure) எனும் அடிப்படையில் கட்டமைப்பு முறையில் செயல்திறன் மற்றும் கணக்கீடுகளில் பிரதிபலிக்கும் பயன்திறன் விவரங்கள், பிற கட்டுமானப் பொருட்களை விட குளிரூட்டப்பட்ட எஃகுப் பயன்பாட்டால் கிடைக்கும் இணைவுப் பொருத்தம் போன்றவைகளும், தாக்கம் (Impact) எனும் அடிப்படையில் சுற்றிலுமுள்ள சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தப்பட்ட தாக்கம் போன்றவையும் கணக்கிடப்பட்டு பரிசுக்குரிய வடிவமைப்பினை இப்போட்டிக்கான நடுவர்குழு தேர்வு செய்யும்.   

பரிசுத்தொகை இப்போட்டியில் பங்கேற்ற வடிவமைப்புகளில் இருந்து நடுவர்களால் தேர்வு செய்யப்பட்ட வடிவமைப்புகள் 2017ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் குளீரூட்டப்பட்ட எஃகுப் பொறியாளர்கள் நிறுவனம் (Cold-Formed Steel Engineers Institute) நடத்தும் கண்காட்சியில் காட்சிப்படுத்தி பின்னர் பரிசுக்குரியவர்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும்.

இப்போட்டியில் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மூன்று ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை பரிசுகள் அளிக்கப்படும். இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், மேலும் விவரங்களை அறிய http://www.cfsei.org/student-competition எனும் இணையதளத்திற்குச் செல்லலாம்.

 - தேனி மு. சுப்பிரமணி

மேலும்

X