ஆடிட்டர்களுக்கான ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் தேர்வு!

1/10/2018 12:39:51 PM

ஆடிட்டர்களுக்கான ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் தேர்வு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

“ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன்” (Staff Selection Commission) நடத்தும் “கம்பைண்டு கிராஜுவேட் லெவல் தேர்வு” (சி.ஜி.எல்.இ) (Combined Graduate Level Examination) (CGLE) பற்றிய பல விவரங்களைத் தொடர்ந்து கடந்த சில இதழ்களில் பார்த்துவருகிறோம். சி.ஜி.எல். தேர்வு மொத்தம் 4 நிலைகளைக் கொண்டது. அவை -

1. கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு (நிலை-1) (Computer Based Examination Tier  I)
2. கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு (நிலை-2) (Computer Based Examination Tier  II)
3. பேனா மற்றும் தாள் முறை (விளக்கமான தாள்) (நிலை-3) (Pen and Paper Mode Descriptive Paper) (Tier-III)
4. கணிப்பொறி தகுதித்தேர்வு / திறன் தேர்வு (நிலை-4) (Computer Proficiency Test / Skill Test) (Tier  4)
இதுவரை நிலை  1 தேர்வுக்கான பாடத்திட்டத்தையும், நிலை-2-ல் தாள் -3 வரை உள்ள தேர்வுக்கான பாடத்திட்டத்தையும் கடந்த இதழ்களில் பார்த்தோம். இந்த இதழில் நிலை -2க்கான இறுதித்தாளுக்கான பாடத்திட்டத்தைப் பற்றியும் எஞ்சியுள்ள 2 தேர்வுநிலைகளைப் பற்றியும் இனிப் பார்ப்போம்...

“அசிஸ்டென்ட் ஆடிட் ஆபீஸர்” (Assistant Audit Officer), “அசிஸ்டென்ட் அக்கவுண்ட்ஸ் ஆபீஸர்” (Assistant Accounts Officer) பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் பொதுஅறிவு (நிதி மற்றும் பொருளியல்) (General Studies) (Finance and Economics) தாள்-4 (Paper IV) தேர்வு எழுத வேண்டியது அவசியமாகும்.

தாள்-4 (Paper- IV)பொதுஅறிவு (நிதி மற்றும் பொருளியல்) General Studies (Finance and Economics) General Studies (Finance and Economics) for the Post of Assistant Audit Officer / Assistant Accounts Officer in Indian Audit and Accounts Department under CAG.

Part A: Finance and Accounts  (80 marks)
1. Fundamental principles and basic concept of Accounting.
Financial Accounting: Nature and scope, Limitations of Financial Accounting, Basic concepts and Conventions, Generally Accepted Accounting Principles. Basic concepts of accounting: Single and double entry, Books of original Entry, Bank Reconciliation, Journal, ledgers, Trial Balance, Rectification of Errors, Manufacturing, Trading, Profit & Loss Appropriation Accounts, Balance Sheet Distinction between Capital and Revenue Expenditure, Depreciation Accounting, Valuation of Inventories, Non-profit organisations Accounts, Receipts and Payments and Income and Expenditure Accounts, Bills of Exchange, Self Balancing Ledgers.

Part B: Economics and Governance  (120 marks)
2. Comptroller and Auditor General of India- Constitutional provisions, Role and responsibility
3. Finance Commission-Role and functions
4. Basic Concept of Economics and introduction to Micro Economics
Definition, scope and nature of Economics, Methods of economic study and Central problems of an economy and Production possibilities curve
5. Theory of Demand and Supply
Meaning and determinants of demand, Law of demand and Elasticity of demand, Price, income and cross elasticity, Theory of consumer’s behaviour-Marshallian approach and Indifference curve approach, Meaning and determinants of supply, Law of supply and Elasticity of Supply.
6. Theory of Production and cost
Meaning and Factors of production; Laws of production- Law of variable proportions and Laws of returns to scale.
7. Forms of Market and price
determination in different markets
Various forms of markets-Perfect Competition, Monopoly, Monopolistic Competition and Oligopoly ad Price determination in these markets
8. Indian Economy
Nature of the Indian Economy Role of different sectors-Role of Agriculture, Industry and Services-their problems and growth; National Income of India-Concepts of National Income, Different methods of measuring national income Population-Its size, rate of growth and its implication on economic growth Poverty and unemployment- Absolute and relative poverty, types, causes and incidence of unemployment
Infrastructure-Energy, Transportation, Communication
9. Economic Reforms in India
Economic reforms since 1991; Liberalisation, Privatisation, Globalisation and Disinvestment
10. Money and Banking
Monetary/ Fiscal policy- Role and functions of Reserve Bank of India; functions of commercial Banks / RRB / Payment Banks Budget and Fiscal deficits and Balance of payments Fiscal Responsibility and Budget Management Act, 2003.
11. Role of Information Technology in Governance

நிலை -3 (Tier- 3) தேர்வு இந்தத் தேர்வு “பேனா மற்றும் தாள் முறை” (Pen and Paper Mode) அமைப்பில் இடம்பெறும். அதாவது, விரிவான விளக்கத்தோடு (Descriptive) கேள்விகளுக்குப் பதில் எழுத வேண்டும். கட்டுரை எழுதுதல், கடிதம் எழுதுதல், சுருக்கி எழுதுதல் ஆகியவற்றில் போட்டியாளரின் திறனை மதிப்பீடு செய்யும் வகையில் கேள்விகள் இடம்பெறும். இந்தி அல்லது ஆங்கிலமொழியில் இந்தத் தேர்வை எழுதலாம். இந்தத் தேர்வு மொத்தம் 60 நிமிடங்கள் நடத்தப்படும். தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 100 என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நிலை - 4 (Tier - 4) தேர்வு இந்தத் தேர்வு சுங்கத்துறை மற்றும் வருமான வரித்துறைகளில் (Central Excise and Income Tax) வரி உதவியாளர்களுக்கு (Tax Assistant) மட்டும் நடத்தப்படுகிறது. குறிப்பாக  “டேட்டா என்ட்ரி ஸ்பீடு டெஸ்ட்” (Data Entry Speed Test) என்னும் “திறன் தேர்வு” (Skill Test) நடத்தி போட்டியாளரின் திறனை மதிப்பீடு செய்து தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மேலும் விவரங்களுக்கு: “கம்பைண்டு கிராஜுவேட் லெவல் தேர்வு” (சி.ஜி.எல்.) (Combined Graduate Level Examination) (CGLE) பற்றிய விரிவான விளக்கங்களைத் தெரிந்துகொள்ள www.ssc.nic.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
 
நெல்லை கவிநேசன்

X