உங்கள் மருத்துவக் கல்வி கனவு நனவாக ஓர் அரிய வாய்ப்பு!

8/28/2018 3:14:11 PM

உங்கள் மருத்துவக் கல்வி கனவு நனவாக ஓர் அரிய வாய்ப்பு!

நன்றி குங்கும் கல்வி-வேலை வழிகாட்டி

மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்றால் நீட் நுழைவுத் தேர்வுதான் ஒரே வழி என்றாகிவிட்டது. மேலும் அதை உறுதி செய்யும் விதமாக இந்திய உச்ச நீதிமன்றம் 2016 ஆம் வருடம் NEET தேர்வை நாடு முழுவதும் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வாக அறிவித்தது முதல், புதியதாக பல நூறு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தப் பயிற்சி மையங்களின் மத்தியில் 2015 ஆம் ஆண்டு முதல் மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக திறம்பட மாணவர்களைத் தயார் செய்துகொண்டிருக்கிறது BRAIN BLOOMS ACADEMY. குறைந்த கட்டணம், நிறைவான பயிற்சி, தரமான அணுகுமுறை என்பது மட்டுமே இவர்களின் நோக்கம். ஒரு வருட முழுநேர NEET பயிற்சியின் மூலம் இதுவரை 250க்கும் மேற்பட்ட மாணவர்களை மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சியடைய செய்துள்ளனர்.  

ஒரு வருட பயிற்சியைப் பற்றி இதன் நிர்வாக இயக்குநர் திரு.ராம்பிரசாத் கூறுகையில், “ஒரு வருட நீட் பயிற்சி என்பது அவ்வளவு எளிதல்ல. மருத்துவம் மட்டுமே என் இலக்கு என்று வரும் மாணவர்களால் மட்டுமே இது சாத்தியப்படும். தினமும் 7 மணி நேரம் வகுப்புகள், NCERT புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு மிகவும் ஆழமாகவும் மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையிலும் நடத்துகிறோம். இந்த ஒரு வருடத்தில் மாணவர்களுக்கு 300க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்துவதால் எந்தவித பயமும் இல்லாமல் எழுதுகிறார்கள்.

இதனால் அவர்கள், எப்படிப்பட்ட தேர்வையும் எளிதாகவும், குறிப்பிட்ட நேரத்திற்குள்ளும் நேர்த்தியாகவும் எழுத முடியும். இந்த பயிற்சிக்கு 30 மாணவர்களை மட்டுமே அனுமதிக்கிறோம். ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்களின் தகுதிக்கேற்ப தனிக் கவனம் செலுத்தி சிறந்த மதிப்பெண் பெறச் செய்வதே எங்களது நோக்கம். இன்னும் ஓரிரு ஆண்டு களில் தமிழகத்திலிருந்து அனைத்திந்திய அளவில் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைப்பதே எங்களது குறிக்கோள். இப்பயிற்சி தொடர்பான தகவல்களுக்கு 9884050488 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்’’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

BRAIN BLOOMSன் கல்வி இயக்குநர் டாக்டர் மகேஸ்வரி கூறுகையில், ‘‘மருத்துவப் படிப்பு என்பது தவம். மருத்துவப் பயிற்சி துறையில் 22 வருட அனுபவத்தில் நான் கற்றுக்கொண்டது விடாமுயற்சியும், ஆரம்பம் முதலே கடின உழைப்பும் உள்ள மாணவர்களே ஒவ்வொரு வருடமும் தலைசிறந்த மருத்துவக் கல்லூரியில் சேருகிறார்கள்.

எங்களது பயிற்சி சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட "3 Phase Methodology". இம்முறையில் பயிலும் ஒவ்வொரு மாணவரும் தேர்ச்சியடைவது உறுதி.. தினமும் நாங்கள் தரும் பயிற்சித்தாள் மற்றும் 300க்கும் மேற்பட்ட தேர்வுகளும் அதற்கான கலந்துரையாடலுமே மாணவர்களைத் திறம்பட தேர்வுக்கு தயார் செய்துவிடும்.

இந்த ஒரு வருட பயிற்சி எடுத்து அரசு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான வாய்ப்பு இருக்கும்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் அயல் நாட்டையும் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை!" என்றார்.மருத்துவப் படிப்பு மட்டுமே என் கனவு என்னும் மாணவர்கள் இந்தப் பயிற்சி மையத்தை அணுகி தேர்ச்சி பெற்று, தங்கள் கனவை நனவாக்கிக்கொள்ளலாம். 

X