அறிய வேண்டிய மனிதர் : ஈனம் கம்பீர்

11/5/2018 2:28:43 PM

அறிய வேண்டிய மனிதர் : ஈனம் கம்பீர்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகள் பொது சபையில் இந்தியாவிற்கான முதன்மைச் செயலாளராகப் பணியாற்றும் ஈனம் கம்பீர் புதுடெல்லியில் 1983ம் ஆண்டு பிறந்தார். டெல்லி இந்துக் கல்லூரியில் கணிதவியல் பட்டம் பெற்ற இவர் ஜெனிவா பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைப் பட்டத்தை முடித்தார்.

2005ம் ஆண்டு யு.பி.எஸ்.சி. தேர்வில் முதல்நிலையில் வென்று வெளியுறவுத் துறையில் அதிக மதிப்பெண் பெற்றார். இந்திய வெளியுறவுத் துறையின் முதன்மைப் பிரதிநிதியாக ஸ்பெயின், அர்ஜெண்டினா, பிரேசில், தென் அமெரிக்கா போன்ற பல நாடுகளில் பணிபுரிந்துள்ளார். ஐநாவிற்கான இந்தியாவின் முதல்  செயலாளரான ஈனம் கம்பீர் ஐநா பெண்கள் அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகளில் இந்தியாவின் பிரதிநிதியாக செயல்படுகிறார். இவரைப்பற்றி

மேலும் அறிய https://en.wikipedia.org/wiki/Eenam_Gambhir

X