மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுரை

5/13/2019 3:38:20 PM

மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுரை

நன்றி குங்குமம் கல்வி-வேலை

கோடை விடுமுறையை  ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. கோடை விடுமுறை நாட்களில் மாணவர்கள் தினமும் நாளிதழ்களைப் படிக்க வேண்டும். அரசு பொது நூலகத்திற்கு சென்று புத்தகங்களைப் படித்து குறிப்பு எடுக்க வேண்டும். தற்போது கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் பெற்றோர் துணையின்றி வெளியே செல்லக்கூடாது.

நீர் நிலைகளுக்கு பெற்றோர் துணையின்றி செல்லக்கூடாது. இருசக்கர வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். காலை மற்றும் மாலை வேளைகளில் விளையாட்டில் ஈடுபட வேண்டும். கைப்பேசியில் நீண்ட நேரம் பேசுவதைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமாக இந்தக் கோடை விடுமுறையை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். மேலும் தனித்திறன் வளர்ப்பு பயிற்சியில் அவர்கள் ஈடுபட வேண்டும் என்பது உட்பட பல அறிவுரைகளை பள்ளிக்கல்வித்துறை வழங்கியிருக்கிறது.

X