அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா?

11/7/2019 1:56:19 PM

அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா?

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

மொழி

Tense Forms (went vs has gone)

Spot the Error -12

அலுவலகப் பணியில் ஆழ்ந்திருந்த ரகுவிடம் வந்த அகிலா, ‘‘He has gone to Delhi yesterday என்பதற்கும்  He went to Delhi yesterday என்பதற்கும்  என்ன வித்தியாசம் சார்?” என்று கேட்டாள். திரும்பிப் பார்த்த ரகு, ‘‘He has gone to Delhi என்பதற்கு “அவர் டெல்லிக்குச் சென்றிருக்கிறார்” என்றும்  ‘‘He went to Delhi’’ என்பதற்கு ‘‘அவர் டெல்லிக்குச் சென்றார்’’ என்றும் பொருள். ஆனால், இதில் yesterday என வந்திருப்பதால் ‘‘He went to Delhi  yesterday’’ என்பதுதான் சரியான பிரயோகம். yesterday வராமலிருந்திருந்தால் ‘‘He has gone to Delhi’’ எனச் சொல்லலாம் என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் ‘‘பொதுவாகவே முடிந்துபோன ஒரு விஷயத்தை சிம்பிள் பாஸ்ட் அல்லது ப்ரசண்ட பெர்ஃபெக்ட்டில் சொல்லலாம். The  Simple Past is used to express an action that took place in the past time. e.g., I saw a monkey yesterday. The Present Perfect expresses an action begun  in the past time and completed at the present time. e.g., The sun has set. The train has departed. The boys have played.I have lived in Chennai for five  years என்றால் ‘‘நான் இன்னும் சென்னையில்தான் வசித்துக்கொண்டிருக்கிறேன்” என்று பொருள். ஆனால், I lived in Chennai for five years என்றால்  எப்போதோ வசித்தேன். ஆனால், இப்போது இல்லை என்று பொருள். சந்தேகம் தெளிவடைய…

1.    I lived / have lived in Mumbai since 1962.
2.    I did not hear / have not heard from her for a month.
3.    He did not finish / has not finished his home work yet.
4.    James Watt has invented / invented the steam engine.
5.    I have written / wrote a letter to her yesterday.
6.    Baby has died / died of pneumonia last night.
7.    I have passed / passed MA in 1989.
8.     They left / have left the house a week ago.
9.    I had gone / went to the cinema last night.
என்ற வாக்கியங்களைக் கவனமாக படித்துப் பார்த்தால் புரியும்’’ என்றார் ரகு.

(மீண்டும் பேசலாம்)

சேலம் ப.சுந்தர்ராஜ்

X