கல்லூரி மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு!

8/23/2017 12:22:20 PM

கல்லூரி மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தமிழகத்தில் கலை கல்லூரிகள், பி.எட் கல்லூரிகள், உடற்பயிற்சி கல்லூரிகள் உள்பட மொத்தம் 1,480 கல்லூரிகள் உள்ளன. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிவடைந்து தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தக் கல்லூரிகளுக்கு, கல்லூரி கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘தமிழகம் முழுவதும் அனைத்துக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் இந்த ஆண்டு புதிதாகச் சேர்ந்துள்ள மாணவ - மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் அறிவுரை கூற வேண்டும்.

மாணவ - மாணவிகள் கல்லூரிக்குக் கண்ணியமான முறையில் உடை அணிந்து வரவேண்டும். கல்லூரி களில் இந்த ஆடை கட்டுப்பாடு ஏற்கனவே அமலில் உள்ளது. கல்லூரிக்கு மாணவ - மாணவிகள் சரியான நேரத்தில் வரவேண்டும். தேவையான மற்றும் தவிர்க்க முடியாத விடுமுறையைத் தவிர மற்ற விடுமுறைகளை எடுக்கக்கூடாது’ எனக் கூறப்பட்டுள்ளது.