அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திறனறி தேர்வுப் பயிற்சி!

12/27/2017 2:40:17 PM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திறனறி தேர்வுப் பயிற்சி!

நன்றி குங்குமம் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி

மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க, திறனறி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேசிய அளவில் நடக்கும் இந்தத் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பின்தங்கி உள்ளனர். இந்த நிலைமையை மாற்ற, தமிழக அரசின் சார்பில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுத்தப்படவுள்ளது.தமிழகத் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, 7,219 நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும், நான்கு லட்சம் மாணவர்களுக்கு, திறனறி தேர்வுக்குப் பயிற்சி தரப்படவுள்ளது.

மாநிலம் முழுவதும், போட்டித் தேர்வுப் பயிற்சிக்கு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட, 500 மையங்களும், தொடக்கப் பள்ளிகளில் அமைக்கப்படும் 3,000 ‘ஸ்மார்ட்’ வகுப்புகளும், திறனறி தேர்வுப் பயிற்சி மையங்களாகச் செயல்பட உள்ளன.இதற்காகத் தகுதியுள்ள ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி தரப்படவுள்ளது. இந்தத் திட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திறனறி தேர்வுக்கான இலவசப் பயிற்சி, இணையதளத்தில், ‘யூ டியூப் லிங்க்’ வழியாகவும் வழங்கப்பட உள்ளது. இதற்காகத் தொடக்கக் கல்வித்துறை சார்பில், புதிய இணையதளமும் தொடங்கப்பட உள்ளது.

மேலும்

X