புதுவைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை!

4/23/2018 10:58:02 AM

புதுவைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றான, புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை, டிப்ளமோ மற்றும் பிஎச்.டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வழங்கப்படும் படிப்புகள்: கலை, அறிவியல், சட்டம், மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளில் பி.ஜி.,டிப்ளமோ முதுநிலைப் பட்டப்படிப்புகள் மற்றும் பிஎச்.டி, படிப்புகள்.

கல்வித் தகுதி: தேர்வு செய்யப்படும் படிப்பிற்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். முதுநிலை மற்றும் பி.ஜி.,டிப்ளமோ படிப்பிற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இளநிலைப் பட்டத்தில் 55% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி, படிப்பிற்கு முதுநிலைப் பட்டப்படிப்பில் 55% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: ஆன்லைன் நுழைவுத் தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 100 மல்டிப்பில் சாய்ஸ் கேள்விகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 24.4.2018
மேலும் விவரங்களுக்கு : http://www.pondiuni.edu.in/

மேலும்

X