தொலைநிலைக் கல்விக்கு 3 பல்கலைக்கழகங்களுக்கே அனுமதி!

5/9/2018 2:34:11 PM

தொலைநிலைக் கல்விக்கு 3 பல்கலைக்கழகங்களுக்கே அனுமதி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தொலைநிலைப் படிப்புகளைக் கட்டுப் படுத்தி வரும் யு.ஜி.சி. உயர்கல்வித் தரத்தை மேம்படுத்தும்வகையில் சமீபத்தில் புதிய வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டது. அதில், தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (‘நாக்’) அங்கீகாரம் பெற்று குறைந்தபட்சம் 3.26 புள்ளிகளைப் பெற்றிருக்கும் பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைக் கல்வியை நடத்த முடியும் எனத் தெரிவித்திருந்தது. ‘நாக்’ அங்கீகாரம்: ‘நாக்’ கவுன்சில் அதிகபட்சமாக 4 புள்ளிகளைக்கொண்ட அளவீடு மூலம் நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களைப் பல்வேறு காரணிகளின் கீழ் ஆய்வுசெய்து அங்கீகாரம் வழங்கும்.

இந்த நிலையில், யு.ஜி.சி-யின் புதிய வழிகாட்டுதலின்படி பார்க்கும்போது தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 3.26-க்கும் மேற்பட்ட நாக் புள்ளிகளைப் பெற்றுள்ளன. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 3.64 புள்ளிகளும், அண்ணா பல்கலைக்கழகம் 3.46 புள்ளிகளும், சென்னைப் பல்கலைக்கழகம் 3.32 புள்ளிகளும் பெற்றுள்ளன. மற்ற பல்கலைக்கழகங்கள் அனைத்தும் 3.26 புள்ளிகளுக்குக் குறைவான புள்ளிகளையே பெற்றுள்ளன. பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) புதிய விதிகளின்படி தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைக் கல்வியை நடத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

மேலும்

X