‘டான்செட்’ தேர்வுத் தேதி மாற்றம்

5/9/2018 2:35:30 PM

‘டான்செட்’ தேர்வுத் தேதி மாற்றம்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

அண்ணா பல்கலை அறிவித்த, ‘டான்செட்’ நுழைவுத் தேர்வு தேதி, மாற்றப்பட்டு உள்ளது.பி.இ., பி.டெக். மற்றும் பி.ஆர்க். பட்டப்படிப்பு முடித்தவர்கள் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் மற்றும் எம்.பி.ஏ. படிப்புகளில் சேர, அண்ணா பல்கலை நடத்தும், டான்செட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

வரும் கல்வி ஆண்டுக்கான, டான்செட் நுழைவுத் தேர்வு மே மாதம் 20ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நாளில், அரசுத்துறையில், உதவி எஞ்சினியர் பணியில் காலியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, எஞ்சினியரிங் பட்டதாரிகள், போட்டித் தேர்வை எழுதுவதா, மேல் படிப்புக்கான நுழைவுத்தேர்வை எழுதுவதா என்ற குழப்பம் அடைந்தனர். இதையடுத்து டான்செட் தேர்வுத் தேதியை மாற்றும்படி தமிழக உயர்கல்வித்துறைக்கு டி.என்.பி.எஸ்.சி., கடிதம் அனுப்பியது.

இதைத் தொடர்ந்து, டான்செட் தேர்வுத் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் மற்றும் எம்.பி.ஏ. படிப்புகளுக்கு மே 19ல் தேர்வு நடைபெற உள்ளது. எம்.சி.ஏ. படிப்புக்கு மே 20ல் தேர்வு நடத்தப்படுகிறது.

மேலும்

X