ஆராய்ச்சிப் படிப்புகளில் ஆண்களின் எண்ணிக்கையே அதிகம்!

5/9/2018 2:38:57 PM

ஆராய்ச்சிப் படிப்புகளில் ஆண்களின் எண்ணிக்கையே அதிகம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்தியாவில் ஆராய்ச்சிப் படிப்புகளில் ஈடுபடும் மாணவர்களில், பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கையே அதிகளவில் இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அந்த அமைச்சகத் தரவுகளில் கடந்த 3 ஆண்டு தரவுகளை பிடிஐ செய்தி நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. அதன்படி, ஆராய்ச்சிப் படிப்புகளில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை மொத்தமாக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் கடந்த 2014-15 காலகட்டத்தில் 1,00,792 பேர் ஆராய்ச்சிப் படிப்புகளுக்காகத் தங்களைப் பதிவு செய்துகொண்டனர். இதுவே, 2015-16 காலகட்டத்தில் 1,09,552-ஆகவும், 2016-17 காலகட்டத்தில் 1,23,712-ஆகவும் அதிகரித்துள்ளது. இதில் இருபால் மாணவர்களை ஒப்பிடுகையில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.

2014-15 காலகட்டத்தில் ஆராய்ச்சிப் படிப்புகளில் ஈடுபட்ட பெண்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், ஆண்களில் 21,000 பேர் அதிகமாக இருந்தனர். அதேபோல் 2015-16 காலகட்டத்தில் 21,688 ஆண்களும், 2016-17 காலகட்டத்தில் 21,882 ஆண்களும் அதிகம் இருந்தனர்.

மேலும்

X