பாடப் புத்தகத்தில் வேலை வாய்ப்புத் தகவல்கள்!

5/17/2018 3:22:31 PM

பாடப் புத்தகத்தில் வேலை வாய்ப்புத் தகவல்கள்!

நன்றி குங்குமம் கல்வி வேலை வழிகாட்டி

தமிழகப் பள்ளிக் கல்வித்துறையில் 13 ஆண்டுகளுக்குப் பின், பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு உள்ளன. தமிழகப் பாடத்திட்டங்கள் சி.பி.எஸ்.இ. என்ற மத்திய பாடத்திட்டத்துக்கு இணையாக இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டன. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச்செயலர் பிரதீப் யாதவ், செயலர் உதயசந்திரன்

மேற்பார்வையில், கல்வியாளர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், புதிய பாடத்திட்டத்தை உருவாக்கினர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், அறிவொளி தலைமையிலான குழுவினர், புத்தகங்களைத் தயாரித்துள்ளனர்.

வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது. இதில், பிளஸ் 1 தவிர, மற்ற வகுப்புகளுக்கு, முதல் பருவ தேர்வுக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பிளஸ் 1 புத்தகத்தில் கூடுதல் அம்சமாக மாணவர்களின் நலனுக்காக

ஒவ்வொரு பாடப் புத்தகத்திலும், அந்தப் படிப்புக்கான வேலைவாய்ப்பு தகவல்கள் இடம்பெற உள்ளன. மேலும், அந்தத் துறைகளில் சாதித்தவர்களின் விவரமும் சேர்க்கப்பட உள்ளது. ஒவ்வொரு பாடப் புத்தகத்திலும், அந்தப் பாடத்தை படித்தால், என்னென்ன மேற்படிப்பு வாய்ப்புகள் உள்ளன; அவற்றைப் படித்தால், எந்தெந்த வேலை வாய்ப்புகளை பெறலாம் என்ற, விரிவான விவரங்கள், புத்தகத்தின் முகப்புரையாகத் தரப்பட உள்ளன.

மேலும்

X