பள்ளிச் சுற்றுலாவுக்கு கடும் கட்டுப்பாடுகள்

5/17/2018 3:24:30 PM

பள்ளிச் சுற்றுலாவுக்கு கடும் கட்டுப்பாடுகள்

நன்றி குங்குமம் கல்வி வேலை வழிகாட்டி

சென்னை, தண்டையார் பேட்டையில் உள்ள இ.சி.ஐ., மெட்ரிக் பள்ளி மாணவர்கள், புனேக்கு சுற்றுலா சென்றனர். அங்கு அணைக்கட்டுப் பகுதியில் குளித்தபோது, மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், பள்ளிக்கல்வித் துறையிடம் அனுமதி பெறாமல், பள்ளியிலிருந்து சுற்றுலா சென்றது தெரியவந்தது.

இதுபோன்ற விபத்துகளை தடுக்கும் வகையில், சுற்றுலா செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, மெட்ரிக் பள்ளி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ளார். அதில், ‘மெட்ரிக் பள்ளிகள், மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்லும் முன்,

கல்வி அதிகாரிகளிடம் உரிய அனுமதியை ஒரு மாதத்திற்கு முன் பெற வேண்டும். இரண்டு மாதங்களுக்கு முன், சுற்றுலா குறித்து திட்டமிட வேண்டும். குளம், குட்டை, ஆறு, ஏரி, அருவி மற்றும் கடல் போன்ற இடங்களுக்குச் சுற்றுலா செல்லக்கூடாது. நான்கு நாட்களுக்கு மேல் சுற்றுலா கூடாது.

பெற்றோர், ஆசிரியர்கள் கூட்டம் கூட்டி, சுற்றுலா திட்டத்துக்கு ஒப்புதல் பெற வேண்டும். வானிலை நிலவரத்தை தெரிந்து, சுற்றுலா தேதி மற்றும் இடத்தை முடிவு செய்ய வேண்டும். சுற்றுலாவுக்கு வரும் மாணவர்களின் பெற்றோரிடம், கண்டிப்பாக ஒப்புதல் பெற வேண்டும்பத்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்,

பாதுகாப்புக்கு செல்ல வேண்டும். மாணவியருடன் ஆசிரியைகள், கட்டாயம் செல்ல வேண்டும். இரவு 10:00 முதல் காலை, 4:00 மணி வரை, பஸ் அல்லது சாலை வழிப் பயணம் கூடாது.
முதல் உதவிப் பொருட்களை, உடன் எடுத்துச் செல்லவேண்டும்.

பாதுகாப்பான, உரிய உரிமம் பெற்ற வாகனத்தை பயன்படுத்த வேண்டும். உரிமம் மற்றும் அனுபவம் பெற்ற ஓட்டுநர்களை அழைத்துச் செல்லவேண்டும் என்றால், வனத்துறை அனுமதி பெற வேண்டும். மாணவர் எண்ணிக்கையை, அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். ஆசிரியர் துணையின்றி, மாணவர்களைத் தனியாக எங்கும் செல்ல அனுமதிக்கக்கூடாது’ என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

X