ஆசிரியர் பணிக்கு கூடுதல் போட்டித் தேர்வு

8/28/2018 3:07:32 PM

ஆசிரியர் பணிக்கு கூடுதல் போட்டித் தேர்வு

நன்றி குங்கும் கல்வி-வேலை வழிகாட்டி


மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவிப்பின்படி, அனைத்து மாநிலங்களிலும், ஆசிரியர் பணிகளுக்கு, தகுதித் தேர்வான, ‘டெட்’ கட்டாயம் ஆக்கப்பட்டது. தமிழகத்தில் 2012ல், டெட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. ஆசிரியர் பணியில் சேர விரும்புவோர், பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., படித்திருப்பதுடன், கூடுதலாக, ‘டெட்’ தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
 
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் பள்ளி, கல்லுாரி கல்விச் சான்றிதழ் அடிப்படையிலான, ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் முறையால், பல ஆண்டுகளாக காத்திருப்போருக்கு, வேலை கிடைப்பதில் பிரச்னை இருந்தது. எனவே, வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், ‘அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கு,’டெட்’ தேர்வு மட்டுமின்றி, கூடுதலாக போட்டித் தேர்வும் நடத்தப்படும். போட்டித் தேர்வு மதிப்பெண்படி மட்டுமே, பணி நியமனம் மேற்கொள்ளப்படும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும்

X