பி.ஆர்க். படிப்பில் சேர விதிகள் மாற்றம்!

11/26/2018 5:06:04 PM

பி.ஆர்க். படிப்பில் சேர விதிகள் மாற்றம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

வரும் கல்வி ஆண்டில், பி.ஆர்க். படிக்க விரும்புவோர் +2-வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் கட்டாயம் படித்திருக்க வேண்டும். பொதுத்தேர்வில், குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்று, நாட்டா நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.

+2 வகுப்பை முறைப்படி, 10 ஆம் வகுப்பு, +1,  +2 என  படித்திருக்க வேண்டும். டிப்ளமோ படிப்பு, +2வுக்கு சமமான கல்வித் தகுதியாக அங்கீகரிக்கப்படும். இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதற்கு மத்திய மனிதவள அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது என இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் பதிவாளர் ஓபராய் தெரிவித்துள்ளார்.

X