மாணவர்களின் அசல் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் வைத்திருக்கக் கூடாது!

11/26/2018 5:07:50 PM

மாணவர்களின் அசல் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் வைத்திருக்கக் கூடாது!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பல்வேறு காரணங்களால் மாணவர்கள் கல்லுாரியிலிருந்து விலகும்போது கட்டணங்களையும், அசல் சான்றிதழ்களையும் கல்லூரி நிர்வாகம் தர மறுப்பதாக, புகார்கள் எழும்புகின்றன. இதனை தெளிவுபடுத்தும் வகையில், பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் ‘அசல் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை  ஆய்வு செய்தவுடன் மாணவர்களிடம் கல்லுாரி நிர்வாகங்கள் ஒப்படைக்க வேண்டும். மாணவர்கள் கையெழுத்திட்ட நகல் சான்றிதழ்களே, கல்லுாரியின் பிற அனைத்துச் செயல்பாடுகளுக்கும் போதுமானது. கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் அசல் சான்றிதழ்களை வைத்திருக்க உரிமையில்லை.

அதேபோல் அட்மிஷன் முடிவதற்கு, 10 நாட்களுக்கு முன்பாகவே கல்லுாரியிலிருந்து வெளியேறும் பட்சத்தில் 100 சதவீதமும், 15 நாட்களுக்குள் எனில் 90 சதவீதமும், 15 நாட்களுக்கு மேல் 30 நாட்களுக்குள் வெளியேறுபவர்களுக்கு 50 சதவீத கட்டணத்தையும் கல்லுாரி நிர்வாகம் திருப்பி அளிக்க வேண்டும். அட்மிஷனுக்கான கடைசித் தேதி அறிவிக்கப்பட்டு 30 நாட்களுக்குப் பின் கல்லுாரியிலிருந்து வெளியேறும் மாணவர்களுக்கு கட்டணத்தை திரும்ப அளிக்க அவசியமில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X