கணினித் துறையில் கால்பதிக்க ஓர் அரிய வாய்ப்பு

4/4/2016 4:55:03 PM

கணினித் துறையில் கால்பதிக்க ஓர் அரிய வாய்ப்பு

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் கணினிக் கல்வி பயிலவும், கணினித்துறையில் வேலைவாய்ப்பு பெறவும் காரணமாக இருக்கும் SAT (Scholarship Aptitude Test) ஸ்காலர்ஷிப் தேர்வை இந்த ஆண்டும் சி.எஸ்.சி. கம்ப்யூட்டர் எஜூகேஷன் நிறுவனம் நடத்துகிறது. கடந்த 22 ஆண்டுகளாகத்  தொடர்ந்து இத்தேர்வை நடத்தி வரும் சி.எஸ்.சி., இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 3ம் தேதி நடத்த உள்ளது.

இந்தத் தேர்வின் நோக்கம்? கடந்த 10 ஆண்டுகளில், உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு மென்பொருள் துறையில் இந்தியா அபாரமான வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இன்று, இந்தியா 90க்கும் அதிகமான நாடுகளுக்கு மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நாடாக வளர்ந்திருக்கிறது. இந்திய மென்பொருள் துறை ஒவ்வொரு ஆண்டும் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. இதற்குக் காரணம் இந்தியர்களின் அறிவுத்திறனும், சுறுசுறுப்புமே. இந்தியாவில் ஆண்டுக்கு பல்லாயிரம் பேர் புதிதாகத் தொழில் தொடங்குகின்றனர்.

இதில் பெரும்பாலானவை கணினித்துறை சார்ந்தவை. இப்படி வேலைவாய்ப்பை அள்ளி வழங்கும் ஒரு துறையில் கால் பதிக்க நினைப்பதே பெரும்பாலானோரின் எண்ணம். இத்தகைய கணினி அறிவும், வேலைவாய்ப்பும் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்பதே இத்தேர்வின் நோக்கம். நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டுமல்லாது கிராமப்புற மாணவர்களும் கணினிப் பயிற்சி பெற வேண்டும் என்றுதான் தமிழகம் முழுவதும் இத்தேர்வை நடத்துகிறது சி.எஸ்.சி. நிறுவனம். கணினித் துறையில் கால் பதிக்க நினைப்பவர்களுக்கு சி.எஸ்.சி.  விரிக்கும் சிவப்புக் கம்பளம் இத்தேர்வு. யார் இத்தேர்வினை எழுதலாம்?

கணினிப் பயிற்சி பெற ஆர்வமுள்ள எவரும் இத்தேர்வை எழுதலாம். 10ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும். இதில் சாதாரண வகையிலான பொதுஅறிவு கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஆங்கிலம்/தமிழ் எதில் வேண்டுமானாலும் இத்தேர்வை எழுதலாம்.

தேர்வு நேரம் மொத்தமே 15 நிமிடங்கள்தான். தேர்வுக்கட்டணம் எதுவும் கிடையாது. நேரே உங்கள் அருகில் உள்ள சி.எஸ்.சி. கம்ப்யூட்டர் மையத்திற்குச் சென்று தேர்வு எழுதுவதற்கான இலவச அனுமதிச் சீட்டினைப் (Hall Ticket) பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் தேர்வை எழுதினால் எவ்வளவு ஸ்காலர்ஷிப் கிடைக்கும்?

25 கேள்விகள் கொண்ட இத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் அனைவருக்கும் அவர்கள் விரும்பும் கோர்ஸ்க்கான மொத்த பயிற்சிக் கட்டணத்தில் 75% வரை அவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் ஸ்காலர்ஷிப் கிடைக்கும்.கடந்த ஆண்டு இத்தேர்வில் 3.5 லட்சம் பேர் கலந்துகொண்டனர். அதில் தங்கள் அறிவுத்திறனை நிரூபித்து 1.5 லட்சம் பேர் சி.எஸ்.சி.யில் கணினிக்கல்வி பெற்று பயனடைந்துள்ளனர்.

சி.எஸ்.சி. வருடத்திற்கு ஒருமுறை வழங்கும் இந்த வாய்ப்பினை நீங்களும் பயன்படுத்திக் கொள்ள உங்கள் அருகில் இருக்கும் சி.எஸ்.சி. மையத்தினைத் தொடர்புகொண்டு, இத்தேர்வு எழுதுவதற்கான அனுமதிச்சீட்டையும் மாதிரி வினாத்தாளையும் பெற்றுக்கொண்டு உங்கள் அறிவுத்திறனை நிரூபியுங்கள். ஸ்காலர்ஷிப்பில் கணினிப் பயிற்சியும், வேலைவாய்ப்பும் பெறுங்கள்.  தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள சி.எஸ்.சி. கிளையை அணுகவும். அல்லது 7200200333 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவும்.

X