கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் படிப்பு கை கொடுக்குமா?

4/28/2016 10:29:06 AM

கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் படிப்பு கை கொடுக்குமா?

கடந்த இதழில் சிவில் எஞ்சினியரிங் மற்றும் அதன் கிளைப் பிரிவுகள் பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்த வாரம் கம்ப்யூட்டர் சயின்ஸ் (Computer Science) பற்றிப் பார்க்கலாம். கம்ப்யூட்டர் சயின்ஸுக்கு கி.மு.800ல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ‘ஷூல்ப சூத்ரா’ (Shulba Sutras) ஒருவகையில் முன்னோடி என்று சொல்லப்பட்டாலும், உலகில் முதன்முறையாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1953லும், அமெரிக்காவில் முதன் முறையாக பர்டியூ பல்கலைக்கழகத்தில் 1962லும்தான் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்ட வகுப்புகள் துவங்கப்பட்டன. இன்று அசுர வேகத்தில் வளர்ந்து, பயன்படாத துறையே இல்லை என்ற அளவுக்கு அந்தத் துறை பெரு வளர்ச்சி பெற்றுள்ளது.

Computer Science and Engineering (CSE) என்ற அடிப்படைப் பொறியியல் பிரிவில்  Computer  Architecture, Data Structures, Database Management Systems, Disign and Analysis of Algorithms, Java and Internet Programing, Operating Systems, Software Engineering, Micro processors and Micro controllers, Theory of Computation, Object-oriented analysis and design, Artificial Intelligence, Compiller Design, Computer Graphics and Multimedia, Digital Signal Processing, Mobile and Pervasive Computing, Parallel programming முதலிய பாடங்கள் இடம்பெறும்.  

இப்படிப்பை முடித்த பொறியாளர்கள், வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் பாதுகாப்பு, கம்பியற்ற வலையமைப்பு, கணக்கீட்டு உயிரியல், வெப்-பயன்பாடு, கணினி வரையியல்,  Embedded Systems, Enterprise  Computing, Network Administration, Scientific Modeling, Data base Systems, Animation, Artificial  Intelligence, Super Computing முதலிய துறைகளில் பணியாற்றலாம். அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போல இத்துறையில் வேலை வாய்ப்புகளுக்கு எக்காலத்திலும் பஞ்சமில்லை. எதிர்காலத்திலும் பஞ்சம் வரப்போவதில்லை. எல்லாத்துறை அலுவலகங்களிலும் தொழிலகங்களிலும் கணினிப் பொறியாளர்கள் தேவைப்படுவார்கள். சம்பளத்திற்கும் குறைவில்லை. 2015ல்  IIT-Delhi  வளாகத்தேர்வில் ரூ.1.42 கோடி ஆண்டுச் சம்பளத்தில்  Facebook  பலரை வேலைக்கு எடுத்திருக்கிறது! TCS, Infosys  போன்ற IT கம்பெனிகள் வெளிநாட்டுப் பணிகளுக்கும் தேர்வு செய்வார்கள்.

Developer, Quality Specialist, Consultant, Computer Architect, Software Engineer முதலிய பணிகளில் இடம்பெறலாம். அரசுத்துறையில் Centre for Development of Advanced Computing (CDAC), National Informatics Centre (NIC), Education and Research Network (ERNET India), Software Technology Parks of India (STPI) முதலியவற்றில் Software/Web Development, Data base/ IT Infrastructure Manager, Information Scientist, System Analyst/ Administrator முதலிய பணிகள் கிடைக்கும். 70 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்குக் கணினிப் பொறியாளர்களுக்கு உலக அளவில் பணிகள் இருப்பதால், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, துபாய், சிங்கப்பூர், பேங்காக் ஆகியவற்றில் இந்தியக் கணினி வல்லுநர்களுக்கு ஏக வரவேற்பு இருக்கிறது.

இத்துறை தொடர்பான அவநம்பிக்கைகள் எதையும் நம்பத் தேவையில்லை. நல்ல பணித்திறனும், உலகளாவிய அறிவும், தொழில்நுட்பப் புரிதலும், மொழிப்புலமையும் மிக்க கம்ப்யூட்டர் பொறியாளர்களுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கவே செய்கிறது. Computer Science and Engineering பாடப்பிரிவை BE படிப்பாகவும், இதிலிருந்து கிளைத்த Information Technology படிப்பை (தகவல் தொழில் நுட்பவியல்) B.Tech படிப்பாகவும் வழங்குகிறார்கள். பொதுவாக, BE படிப்பில் பொறியியல் கருத்துக்களையும் கோட்பாடுகளையும் நிறுவுவதிலும் புரிந்துகொள்வதிலும் அதிக கவனம் செலுத்தப்படும்; மாறாக, B.Tech  படிப்பில் அக்கருத்துக்களையும் கோட்பாடுகளையும் செயல்படுத்திப் பயன் பெறுவதில் அதிக கவனம் இருக்கும். அதாவது, முன்னதில் ஆழமும், பின்னதில் அகலமும் அதிகமாகப் பேசப்படும் என்பார்கள்.

மென்பொருள் (Software) தேவையை இந்த இரண்டுமே நிறைவு செய்யும் என்றாலும், வன்பொருள் (Hardware) ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு CSE படிப்பு அதிகம் உதவும். இக்காரணத்தால் IT படிப்பு அண்மைக்காலத்தில் சற்றுப் பொலிவிழந்துவிட்டது என்றே சொல்லலாம். ஆயினும் இன்னும் மற்ற பிரிவுகளைவிடப் பணி, முன்னேற்ற வாய்ப்புகள் மிகுந்ததாகவே உள்ளது. களப்பணிக்குத் தேர்வு செய்பவர்களில் பலர் திறமை, அறிவுக்குத்தான் முதலிடம் கொடுப்பார்களே தவிர, CSE/IT வேறுபாட்டுக்கு அல்ல. கணினி வன்பொருள், மென்பொருள், மின்னணுவியல், அரைக்கடத்திகள், தொலைத் தொடர்பும் பொறிகளும், பொறியியல், இணையம், உடல்நலவியல், இ-காமர்ஸ், கணினிச்சேவை  (Computer Services) முதலிய பல துறைகளும் தகவல் தொழில் நுட்பவியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை.

Database Management, Computer Organization, Programming and Data Structure, Embedded  Systems, Operating Systems, Web Technology, Software Engg., Object Oriented Analysis and Design, Cryptography and Network Security, Embedded Systems, Mobile Computing, Graphics and Multimedia, Soft Computing, Business Process model ஆகியவை இப்படிப்பில் பாடத்திட்டப் பகுதிகள். இப்படிப்பை முடித்தவர்களுக்கு Network Engineer, UI Developer (E-Commerce), Web Producer, Hybris Java Developer, Business Analyst, System Monitoring Engineer, Azure (Dotnet), Embedded Software Engineer, Source Control Management Engineer முதலிய பணிகள் பல அரசு/தனியார் நிறுவனங்களில் காத்திருக்கின்றன.

Infocomm Development Authority of Singapore, New Zealand (இந்நிறுவனத்தில் 75,000 பேர் Information & Communications Technologies துறையில் பணியாற்றுகிறார்கள்), சவூதி அரேபியா (ஆங்கிலம் அறிந்த வெளிநாட்டவர்க்கு 3000 வேலைகள் காத்திருக்கின்றன) எனப் பல்வேறு நாடுகளிலும் பணி வாய்ப்பு உண்டு. Computer Science and Engineering படிப்பில் இருந்து கிளைத்த மற்ற பிரிவுகளாக Communication and Computer Engg, Computer Science, Computer Science and Information Tech., Computer Software Engg., Information and Communication Tech., Information Tech. and Management முதலிய படிப்புகளைச் சொல்லலாம். அணுகிப் பார்த்தால்,  இவற்றில் பல, CSE, IT ஆகிய படிப்புகளின் விகிதக் கலவைகளே என்பது தெரியவரும். அதற்கேற்பப் பாடப்பகுதிகளும் இருக்கும். மணிப்பால் பல்கலைக்கழகம் போன்ற சிலவற்றில், B.Tech- Computer & Communication Engg. படிப்பு வழங்கப்படுகிறது.

இதில் கணினி மென்பொருள் தயாரிப்பிலும், குறிப்பாக மொபைல் தொடர்பியலில் மின்னணுத் தொடர்பியலின் பயன்பாட்டிலும் கவனம் செலுத்தப்படுகிறது. முக்கியமாக ஒரு விஷயத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். எப்பொழுதுமே அடிப்படைப் பிரிவுக்குத்தான் முதலிடம் என்பதால் CSE-க்கு அடுத்து, பிற கிளைப் படிப்புகளில் கவனம் செலுத்துவதே நல்லது. பணி வாய்ப்பு பொதுவாக நன்றாக இருந்தாலும், இந்த வரிசைகளில்தான் அமையும். இத்துறையில் படிப்பை முடித்து வெளியில் வரும் பட்டதாரிகளில் 25% பேருக்குத்தான் உடனடிப் பணிக்குத் தகுதி இருப்பதாக Nascom போன்ற அமைப்புகள் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகின்றன. பொதுவாக எல்லாப் பொறியியல் மாணவர்களும், குறிப்பாக இத்துறை மாணவர்கள், படிக்கும் பொழுதே, பணிக்குத் தேவையான குழுவில் பணியாற்றுதல், சகிப்புத்தன்மை, வழி நடத்துதல், புதிய சிந்தனை, பேச்சுத் திறமை, தெளிவான கருத்துப் பரிமாற்றம், கிரகிப்பு முதலிய மென் திறமைகளை (Soft Skills) வளர்த்துக்கொள்வது பயனளிக்கும். பட்டம் பெற்ற பிறகும் இதற்காகவே உள்ள முடிப்புப் பள்ளிகளில் (Finishing Schools) பயிற்சி பெற்றும் பயன் பெறலாம்.

முனைவர் ப.வே.நவநீதகிருஷ்ணன்
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சேர்க்கைப் பிரிவு இயக்குநர்

X